தரைமட்ட விலையில் நானோ மாதிரி குட்டி இவி காரை களம் இறக்கும் ஓலா!

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பவனையில் சிறப்பாக வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம் புதிய கண்டுபிடிப்புகள், அம்சங்கள் மற்றும் புதிய தயாரிப்புகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் எதிர்கால விற்பனையையும் மனதில் வைத்து தங்கள் தயாரிப்புகளை மாற்றியமைக்க யோசித்து வருகிறது.

இதன்படி இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் 4 வீலர் செக்மெண்டிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. தற்போது 4 வீலர் விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைவாக விற்பனையாகி வந்தாலும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இதில் காலடி தடத்தை பதிக்க ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதற்காக சமீபத்தில் தனது காம்பேக்ட் இவி காருக்கான டிசைனை அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.

Ola Compact Electric Car

இந்த டிசைனின்படி ஓலா நிறுவனம் தனது காம்பேக்ட் இவி காரை பாக்ஸியான, டால் பாய் ஃப்ரோபைலில் வடிவமைத்துள்ளது. இதன் வடிவமைப்பை பார்க்கும் போது எம்ஜி கோமெட் இவி காரை போன்ற லுக்கில் இருக்கிறது.ஆனால் ஓலா இவி காரில் 4 டோர்கள் உள்ளன. பூட் வசதியும் தனியாக வழங்கப்பட்டுள்ளது. கோமெட் இவி காரில் 2 டோர் மட்டுமே உள்ளது. கோமெட் இவியை விட அளவில் ஓலா இவி கார் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா இவி காரில் உட்புறம் அதிக இடவசதி வேண்டும் என்பதற்காக இந்த காரின் வீல் பகுதி முடிந்தளவு கார்னர் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. கோமெட் இவி காரிலும் இதே டிசைன் வடிவமைத்து தான் வழங்கப்பட்டுள்ளது. ஓலா இவி காரின் முன்பக்கம் ஃபிளாட்டாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பம்பர் பகுதி சிம்பிளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீளமான எல்இடி ஹெட்லைட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் முகப்பு பகுதியில் தான் சார்ஜ் ஏற்றும் வகையில் வசதி வழங்கப்படுகிறது. இது போக வட்ட வடிவிலான வீல் ஆர்ச்கள், சிறப்பான டோர் ஹேண்டில்கள், ஃபிளாட்டான ரூஃப் மற்றும் பூட் லிட் ஆகியன உள்ளன. பின்பக்கம் ஃபிளாட்டான எல்இடி டெயில் லைட் வசதிகளும் உள்ளது. இந்த காரில் பெரிய ஜன்னல்கள் வழங்கப்பட்டுள்ளது. இட வசதிக்காக டோர் ஹேண்டில்கள் பி மற்றும் சி பில்லர்களில் வழங்கப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் இந்த இவி காரின் பேட்டரி குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருந்தாலும் இந்த கார் 200-250 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோமெட் இவி கார் 230 கி.மீ ரேஞ்ச் தருகிறது. என்ட்ரி லெவல் இவி காரான டியாகோ இவி காரும் 223-293 கி.மீ ரேஞ்சை தருகிறது.

ஓலா நிறுவனம் சமீபத்தி்ல தனது ஜென் 4 பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தியள்ளது. இது அதிக வசதிக கொண்ட ஃபிளாட்பார்மாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய இவி கார் போக இந்நிறுவனம் இலகு ரக கமர்ஷியல் வாகனம் 3 வீலர் ஆகியவற்றை இந்த பிளாட்ஃபார்மிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது புதிய தயாரிப்புகளுக்கான தயாரிப்பு செலவை கணிசமாக குறைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் இந்த கார்களுக்கு 4680 பாரத் செல் பேட்டரிகளை பயன்படுத்துகிறஐது. இது முழுவதுமாக இந்நிறுவனமே தயாரிக்கும் பேட்டரிகளாகும். இந்த காரின் காரின் புதிய வடிவமைப்பு மற்றும் அப்டேட்டிற்கு இந்நிறுவனம் சுலமாக செய்ய முடியும். இந்த பேட்டரிக்கு தற்போது தான் அரசு சான்று வழங்கியுள்ளது. இந்த கார் தமிழகத்தி்ல உள்ள ஆலையில் தான் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 11, 2025, 14:35 [IST]
English summary
Ola compact electric car design patented in india comet ev rival
மேலும்... #ola #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+