கார் முதலில் இருந்த கண்டிஷனை பார்த்து இருந்தால் ஷாக் ஆகி இருப்பீர்கள்! இன்னும் ஒரு 10- 15 வருஷத்துக்கு ஓடும்!!

அம்பாசடர் (Ambassador) கார்களுக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். பழமையான இந்துஸ்தான் (Hindustan) நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட அம்பாசடர் கார்கள் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இந்திய கார் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தின. கார்கள் என்றாலே அம்பாசடர் கார் மட்டுமே என ஒரு சமயத்தில் நினைத்து கொண்டிருந்தவர்களும் உண்டு. அந்த அளவிற்கு பழமையான மற்றும் பிரபலமான அம்பாசடர் கார்களை இப்போது சாலையில் காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு வரையில் அரசாங்க வாகனங்களாகவும், டாக்ஸி (Taxi) உள்ளிட்ட வாகனங்களாகவும் அம்பாசடர் கார்கள் சாலையில் காட்சி தந்து இருந்த நிலையில், சமீப காலமாக அம்பாசடர் கார்களை முற்றிலுமாக பார்க்க முடிவதில்லை.

இந்த அளவிற்கு அரிதானதாக மாறிப்போன இந்துஸ்தான் அம்பாசடர் கார் ஒன்றை ஆந்திரா பிரதேசத்தில் சிலர், இன்றைய கால மாடர்ன் கார்களுக்கு இணையாக புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றி உள்ளனர். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் (Instagram) வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

old hindustan ambassador car customised

இந்த குறிப்பிட்ட அம்பாசடர் கார் ஆந்திராவை சேர்ந்ததாக இருப்பினும், காரை புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றியது எல்லாம் கேரளாவில் நடந்தது ஆகும். பொதுவாகவே, மலையாளத்தவர்கள் இவ்வாறு காரை தங்களது விருப்பத்திற்கேற்ப கஸ்டமைசேஷன் (Customisation) செய்து பயன்படுத்துவதில் கைத்தேர்ந்தவர்கள் என்பதால், ஆந்திராவில் இருந்து காரை நீண்ட தூரம் பயணம் செய்து கேரளாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள கஸ்டமைசேஷன் மாற்றங்கள் என்று பார்த்தால், முதலாவதாக நம்மை வசீகரிப்பது காரின் பளிச்சிடும் வெள்ளை நிறம் ஆகும். கார் முழுவதும் புதியதாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்திற்கு மத்தியில் ஆங்காங்கே கருப்பு நிறம் இருப்பது காரின் அழகை இன்னும் ஹைலைட் படுத்திக் காட்டுகிறது.

காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட்கள் வழக்கம்போல் வட்ட வடிவில் உள்ளன என்றாலும், ஹெட்லைட் சிஸ்டத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ள விளக்குகள் புதியதாக எல்இடி தரத்தில் வழங்கப்பட்டவை ஆகும். எல்இடி ஹெட்லைட்கள் உடன் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகளும் புதியவை ஆக வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்பாசடர் காரின் முன்பக்க கிரில் பகுதியிலும் வேலை செய்யப்பட்டுள்ளது. கிரில் தற்போது கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதைவிட முக்கியமாக, முன்பக்க கிரில் பகுதியின் மத்தியில் வெள்ளை நிறத்தில் எல்இடி ஸ்ட்ரிப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்களுக்கு சரியாக கீழே க்ளீயர்-லென்ஸ் உடன் டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க பம்பரின் வடிவத்திலும் சில வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பம்பரின் இரு முனைகளிலும் எல்இடி ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

காரின் பக்கவாட்டிற்கு வந்தால், இந்த அம்பாசடர் காரில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza) கார்களில் வழங்கப்படும் எலக்ட்ரிக் மூலமாக மடக்கி அட்ஜெஸ் செய்யக்கூடிய ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்த அம்பாசடர் காரில் இருந்த 15-இன்ச் அலாய் சக்கரங்கள் நீக்கப்பட்டு, அவற்றிற்கு பதிலாக வேறு 15-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கதவு கைப்பிடிகள் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த அம்பாசடர் காரின் உள்ளே கேபின் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. முன் இருக்கைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) கார்களில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்பாசடர் காரின் உட்புறம் முழுவதும் பழுப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்தத்தில் இந்த இந்துஸ்தான் அம்பாசடர் கார் கூடுதல் ஆயுட்காலத்தை பெற்றுள்ளது. பொதுவாக, இவ்வாறு காரை தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றும்போது பெரிய அளவிலான சக்கரங்கள் வழங்கப்படுவது உண்டு. அவ்வாறு சக்கரங்களை வழங்கியதினாலேயே பல கார்களில் பயண அனுபவம் குறைந்துள்ளது. ஆனால், இந்த அம்பாசடர் கார் கஸ்டமைசேஷனில் அவ்வாறான எந்த மாற்றம் செய்யப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, June 23, 2025, 5:00 [IST]
English summary
Old hindustan ambassador car customised in kerala style check all details here
மேலும்... #car customisation #ambassador car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+