முன்னாடி பார்த்து ஏமாறாதீங்க... நம்ம ஊர் காரங்களுக்கு இதெல்லாம் சொல்லியா தரனும்!!

இந்தியாவின் தேசிய கார் என சொல்லும் அளவிற்கு ஒரு சமயத்தில் சாலை எங்கிலும் மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) கார்கள் தென்பட்டன. இப்போது ஆல்டோ கே10 (K10) வந்துவிட்ட போதிலும், பழைய ஆல்டோ கார்களில் சில இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அந்த ஆல்டோ கார்கள் எல்லாம் கார்களாக தான் பயன்படுத்தப்படுகின்றன என உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில், அப்படிப்பட்ட ஆல்டோ காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

கார் மற்றும் 'குட்டி யானை' வாகனம் என இரண்டும் இணைந்ததுதான், பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனம் ஆகும். அதாவது, இவற்றை காராகவும் பயன்படுத்தலாம்; அதேநேரம் டன் வரையில் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனமாகவும் பயன்படுத்தலாம். இந்தியாவில் பிக்-அப் டிரக்குகளுக்கு பெரியதாக மார்க்கெட் இல்லை.

alto converted into pick-up truck

குறைந்த எடையிலான சரக்குகளை கொண்டு செல்வதற்கு அதிக தொகையில் பிக்-அப் டிரக் வாகனங்களை வாங்குவதற்கு நம் மக்கள் தயாராக இல்லை. ஆனால், இந்த வாகனங்களை யாரும் விரும்புவது இல்லை எனவும் சொல்ல முடியாது. ஏனெனில், அமெரிக்கர்களை போன்று இங்கும் சிலர் இத்தகைய வாகனங்களை பயன்படுத்த விரும்பத்தான் செய்கின்றனர்.

அத்தகையவர்களுள் சிலர், பழைய மாருதி சுஸுகி ஆல்டோ காரை இங்கு பிக்-அப் டிரக் வாகனமாக மாற்றி உள்ளனர். இந்தியாவில் வாகனங்களை இவ்வாறு மாடிஃபிகேஷன் (Modification) செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அப்படியிருந்தும், இவ்வாறு கார் ஒன்று பிக்-அப் டிரக் ஆக மாற்றப்படுவதை கடந்த சில வருடங்களாக அதிகமாக பார்க்க முடிகிறது.

alto converted into pick-up truck

ஆல்டோ என்கிற விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) காரை பஞ்சாப் (Punjab) மாநிலத்தின் கரார் என்கிற பகுதியில் இவ்வாறு மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சில்வர் நிறத்திலான ஆல்டோ பிக்-அப் டிரக் வாகனத்தை சுற்றிலும் விவசாய வேளாண் இடங்களாக காட்சியளிக்கின்றன. விவசாய பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு இவ்வாறான ஒரு பிக்-அப் டிரக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வாகனத்தில் முன்பக்கத்தில் எல்லாமே மாருதி சுஸுகி ஆல்டோ காரில் இருப்பதை போன்றுதான் உள்ளது. ஆனால், ஆல்டோ காரின் பின்பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது; பின் வரிசை இருக்கைகள் உள்பட. இதனால், இந்த வாகனத்தை காராக பயன்படுத்த முடியாது. இருவர் மட்டுமே அமர முடியும். அந்த இடத்தில் பெரிய கார்கோ படுக்கையை பொருத்தி உள்ளனர்.

alto converted into pick-up truck

இதற்கேற்ப காரின் உடல் வெட்டப்பட்டு இருப்பதுடன், மேற்கூரையும் அறுக்கப்பட்டுள்ளது. ஆல்டோ காரின் பின் கதவுகள் அப்படியே விடப்பட்டுள்ளதை காணலாம். ஆனால், பின் கதவுகளை திறக்க முடியாதப்படி லாக் செய்திருப்பர் என நம்புகிறோம். டெயில்லைட் பகுதியையும் அப்படியே விட்டுள்ளனர். இந்த வாகனத்தின் பின்பக்கத்தில் நம்மை வசீகரிப்பது, மஹிந்திரா (Mahindra) வாகனத்தின் கதவு ஆகும். இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த வாகனத்தை ஓட்டியும் காட்டியுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஆல்டோ போன்ற சிறிய அளவிலான காரை இவ்வாறு மாற்றும்போது, அதன் 4 இருக்கைகளையும் பயன்படுத்த முடியாது. பின் இருக்கைகளை இழக்க வேண்டியதாகவே இருக்கும். அதுதான் இங்கும் நடந்துள்ளது. இந்த மாடிஃபை செய்யப்பட்ட வாகனத்தை வெளியூர்களுக்கு கொண்டு சென்றால், கண்டிப்பாக போலீசாரிடம் சிக்க நேரிடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 8, 2025, 15:00 [IST]
English summary
Old maruti suzuki alto car converted into pick up truck in punjab
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X