28 வருஷம் பழைய கார் மாதிரியா தெரியுது... வாங்கியவர் செம்ம அதிர்ஷ்டசாலினு தான் சொல்லனும்!!

டாடா சியரா (Tata Sierra) இந்திய வாகனச் சந்தையின் ஒரு முக்கிய அடையாளம். 1991ஆம் ஆண்டில் அறிமுகமான இது, இந்தியாவின் முதல் உள்நாட்டுப் பயணிகள் வாகனமாகப் பெருமை பெற்றது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற ஆரம்பித்த சியாராவுக்கு சந்தை சூழலுக்கு ஏற்ப, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல மேம்பாடுகளை வழங்கியது.

2003 வரை விற்பனையில் இருந்த சியரா கார்களை அதன் பின்பும் பலர் தங்களது விருப்பத்திற்கேற்ப மாடிஃபிகேஷன் (Modification) செய்து பயன்படுத்துவதை இப்போதுவரையில் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் தற்போது, 1997 டாடா சியரா கார் ஒன்று, மிகுந்த துல்லியத்துடனும் கவனத்துடனும் புதுப்பிக்கப்பட்டு, அதன் பழைய பொலிவை மீண்டும் பெற்றுள்ளது.

old tata sierra car restoration

இந்த வாகனத்தின் உரிமையாளரான ரிஷப் என்பவர் தனது சியரா கார் எவ்வாறு எல்லாம் மாற்றப்பட்டுள்ளது என்பதை ஒரு பதிவில் விரிவாகப் பகிர்ந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த எஸ்யூவி காரை அவர் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது வாகனம் குறைபாடற்ற தோற்றத்தில் இருந்தாலும், இன்னும் சில மேம்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

டாடா சியரா கார் ரிஷப்பின் இளமைக் காலத்தில் இருந்தே அவரை ஈர்த்துள்ளது. அவரது குடும்பம் அப்போது மாருதி 800 கார் வைத்திருந்தபோது, சாலையில் சியரா கடந்து செல்லும்போதெல்லாம் அதன் அழகில் மயங்கியுள்ளார். குறிப்பாக, அதன் பிரம்மாண்டமான பின்பக்க கண்ணாடிப் பகுதியையும், கம்பீரத்தையும் அவர் மிகவும் வியந்து பார்த்துள்ளார்.

old tata sierra car restoration

சிறு வயதில் சிவப்பு நிறத்தில் ஒரு சியரா கார் பொம்மையை கூட ரிஷப் வைத்திருந்தாராம். 2024 ஜூன் மாதம், சியரா மீதான தனது ஆர்வத்தின் தூண்டுதலால், ரிஷப் முதலில் ஒரு பழைய சியரா டை-காஸ்ட் காரை ஃபேஸ்புக்கில் கண்டறிந்து வாங்க முயன்றுள்ளார். பின்னர், ஓ.எல்.எக்ஸ் மூலம், 1997ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, பழைய முகப்பு பகுதி கொண்ட முதல் தலைமுறை சியராவை ஜெர்மன் ரெட் நிறத்தில் தேடிக் கண்டுபிடித்துள்ளார்.

வாங்கியபோது வாகனம் ஓரளவுக்கு அதன் ஒரிஜினல் நிலையில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சியரா காரை அதன் இரண்டாவது உரிமையாளரிடம் இருந்து ரிஷப் வாங்கியுள்ளார். இது 12 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாபில் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. ரிஷப் தொலைபேசி மூலம் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, வீடியோ அழைப்பு மூலம் வாகனத்தைப் பரிசோதித்து, பெரிய அளவில் பேரம் பேசாமல் வாங்க ஒப்புக்கொண்டார்.

old tata sierra car restoration

பின்னர், பஞ்சாப் சென்று வாகனத்தை நேரில் சரிபார்த்து வீட்டிற்கு எடுத்து வந்தார். வாகனம் வாங்கியபோது அதன் அனைத்து ஒரிஜினல் லோகோக்களும் அப்படியே இருந்ததாக உரிமையாளர் குறிப்பிடுகிறார். 28 வருடங்கள் பழைய சியரா காரை அதன் ஒரிஜினல் பாகங்கள் உடன் இப்போது கண்டறிவது மிகவும் கடினம். ஓடோமீட்டரில் 1,36,160 கிலோமீட்டர் ஓடியிருந்தது.

மேலும், அதன் பாடி பேனல்களிலும் பெரியதாக எந்த பழுதுபார்ப்புகளும் நடந்திருக்கவில்லை என்பதால், ரிஷப்புக்கு இந்த சியரா காரை வாங்குவதில் எந்த தயக்கமும் ஏற்படவில்லை. 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தபோதிலும், வாகனம் எளிதாக ஸ்டார்ட் ஆனதாக ரிஷப் கூறுகிறார். இருப்பினும், சில பகுதிகளில் பழுதுபார்ப்பு தேவைப்பட்டுள்ளது. சில பாகங்களைச் சரிசெய்யவும், சிலவற்றை மாற்றவும் வேண்டி இருந்துள்ளது.

old tata sierra car restoration

மேலும், ஆயில் லீக் பிரச்சினையும் இருந்தது. ப்ளோவர் மற்றும் ஏசி செயல்படவில்லை. வாகனத்தை வீட்டிற்கு எடுத்து வந்தவுடன் ரிஷப் பழுது பார்ப்பு பணிகளைத் தொடங்கினார். இருப்பினும், உதிரி பாகங்களைக் கண்டறிவது மிகவும் சவாலாக இருந்துள்ளது. இதனாலேயே, இந்த வேலைகளை முடிக்க தனக்கு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆனதாக ரிஷப் தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாடா சியரா காரின் நிலை, அது முன்பு ஒரு குடும்பத்தால் எந்த அளவிற்கு நேசிக்கப்பட்டு உள்ளது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், காரில் இருந்த சிறு சிறு பழுதுப் பார்ப்புகளை சரிச்செய்து, தனது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதற்கு 1.5 வருடம் தேவைப்பட்டு இருப்பது கொஞ்சம் அதிகம் தான். சியராவின் வயது மற்றும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அது உற்பத்தி நிறுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டால் இது ஆச்சரியமில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, October 27, 2025, 5:00 [IST]
English summary
Old tata sierra car restored after 28 years to brand new condition check all details here
மேலும்... #car customisation #car customize #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X