அடி மாட்டு விலைக்கு டிரைவரே இல்லாமல் ஓடும் ஆட்டோ! ஆட்டோ டிரைவர் பிழைப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாங்களே!
ஒமேகா சிக்கி நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக டிரைவர் இல்லாமல் இயங்கும் 3 வீலரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது. அதுவும் வெறும் ரூ4 லட்சத்திற்கு இந்த வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆட்டோ டிரைவர்களுக்கு வசதியாக இந்த வாகனம் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன செக்டாரில் இன்று ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒமேகா செக்கி மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவின் முதல் ஆட்டோமெட்டிக் எலெக்ட்ரிக் 3 வீலர் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்திற்கு சுவயம்காத்தி என பெயர் வைத்துள்ளத. இந்த வாகனம் வெறும் ரூ4 லட்சத்திற்கு அறிமுகமாகியுள்ளது. இந்த வாகனம் கமர்ஷியல் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை அந்நிறுவனம் ஏஐ தொழிற்நுட்பத்தில் ஆட்டோனமி சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் டிரைவர் இல்லாமல் குறைந்த தூரம் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏர்போர்ட், ஸ்மார்ட் கேம்பஸ், இன்ட்ரீயல் பார்க், கேட்டட் கம்யூனிட்டி ஆகிய பகுதிக்கும் இந்த வாகனத்தை டிரைவர் இல்லாமல் இயக்க முடியும்.
இதற்காக இந்த வாகனத்தில் ப்ரீமேப் செய்யப்பட்டு பாதுகாப்பிற்காக எந்த ரூட்டில் தான் பயணம் செய்யவேண்டும் என திட்டமிடப்பட்டு அந்த ரூட்டில் வாகனம் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை கொண்ட நாடுகளில் அதிக போக்குவரத்து நெருக்கடி மற்றும் லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி பெரிய சவாலாக உள்ளது. இதற்கு இந்த வாகனம் ஒர தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு வெளியான மெக் மின்சே ரிப்போர்ட்டின் படி உலகளவில் ஆட்டோமெட்டிக் வாகனவ மார்கெட் மிகப்பெரிய அளவில் வளரும் என்றும் 2030ம் ஆண்டு 620 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இதன் வளர்ச்சி இருக்கும் என கூறியுள்ளது. அதற்கு இந்த வாகனம் முதல்படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம் நிச்சயம் மிகப்பெரிய வளர்ச்சியையும் விற்பனையையும் பெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த வாகனம் ரூ4 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் கார்கோ வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வாகனம் ரூ4.15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த இரண்டு வேரியன்ட்களும் ரெகுலரான ஒஎஸ்எம் எலெக்ட்ரிக் 3 வீலரை விட ரூ75 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் விலை அதிகமாக உள்ளது. இந்த விலைவித்தியாசத்தை ரூ50,000த்திற்குள் குறைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் ஒராண்டிற்கும் இதை சாத்தியப்படத்த அந்நிறவனம்திட்டமிட்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் உள்ள ஆட்டோமெட்டிக் தொழிற்நுட்பத்தில் வாகனம் இயங்கும் போது 12 கி.மீ வேகத்தில் தான் வாகனம் பயணிக்கும். வாகனம் பயணிக்கும் போது 6 மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால் அதை கணித்து சுதாரித்துக்கொண்டு தனது பாதையை மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பத்திற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பொது சாலையில் டிரைவர் இல்லாமல் இயங்கும் வாகனத்தை இயக்க அனுமதி கிடையாது. அதனால் தனியார் இடங்களில் மட்டுமேஇது இயக்கப்படும். விரைவில் சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைத்தால் பொது சாலைக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி வந்தால் நிச்சயம் இது மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








