இந்தியாலேயே அதிகம் ரேஞ்ச் தரும் இ-ஆட்டோ! விலையை கேட்டீங்க காரை தூக்கி போட்டுட்டு இந்த ஆட்டோவை வாங்கிருவீங்க!

ஓர் முழு சார்ஜில் மிக அதிகம் தூரம் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்சா (Electric Auto Rikshaw)-வை, மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. ஒமெகா செய்கி பிரைவேட் லிமிடெட் (Omega Seiki Pvt. Ltd), இதுவே அந்த நிறுவனம் ஆகும். ஒமெகா செய்கி என்ஆர்ஜி (Omega Seiki NRG) எனும் எலெக்ட்ரிக் ஆட்டோவையே அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுவே, இந்தியாவின் அதிகம் ரேஞ்ச் தரும் மூன்று சக்கர வாகனம் ஆகும்.

ஓர் முழு சார்ஜில் இது 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அளவு அதிக ரேஞ்சை இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் வேறு எந்த மூன்று சக்கர வாகனமும் வழங்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அதிகபட்ச ரேஞ்ச் திறனுக்காக 15 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே ஒமெகா செய்கி என்ஆர்ஜி இ-ஆட்டோவில் வழங்கி இருக்கின்றனர்.

Omega seiki nrg electric three-wheeler launched

இதற்கு அறிமுகமாக ரூ. 3.55 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விலை சற்றே அதிகமாக இருப்பதாக நீங்கள் உணரலாம். ஆனால், அதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்களுக்கு இந்த விலை ஓர் பொருட்டே அல்ல என்கின்றது அதை தயாரித்த நிறுவனம்.

எனவே எலெக்ட்ரிக் கால் டாக்சி கார் பிரியர்களும் இந்த இ-ஆட்டோவை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த குறைவான விலையை இந்திய மின்சார மூன்று சக்கர வாகன பிரியர்களை வளைத்துப் போடும் நோக்கிலேயே அவர்கள் நிர்ணயம் செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிதியாண்டில் மட்டும் 5 ஆயிரம் யூனிட்டுகளுக்கும் அதிகமா இந்த இ-ஆட்டோவை விற்பனைச் செய்ய ஒமெகா செய்கி நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

இது தவிர ஐந்து ஆண்டுகள் அல்லது 2 லட்சம் கிமீ வாரண்டி திட்டத்தையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த ஆட்டோரிக்சாவில் வெறும் 45 நிமிஷ சார்ஜிலேயே 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். ஆனால், இதற்கு அதிவேக சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்த வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இரட்டிப்பான லாபத்தை வழங்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த மாதிரியான அம்சங்களை ஒமெகா செய்கி நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஆகையால், ஆட்டோரிக்சா ஓட்டுநர்கள் மத்தியில் புதிய ஒமெகா செய்கி என்ஆர்ஜி இ-ஆட்டோவிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மோட்டாரை பொருத்த வரை இந்த இ-ஆட்டோவில் 12.8 kW மற்றும் 430 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 47 கிமீ மட்டுமே ஆகும். அதிக ரேஞ்சை உறுதிச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு குறைவான திறன் கொண்ட மோட்டாரை ஒமெகா செய்கி வழங்கி இருக்கின்றது.

Take a Poll

இந்திய அளவில் நிறுவனத்தின்கீழ் 250க்கும் அதிகமான விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்திலும் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், புதிய ஒமெகா செய்கி என்ஆர்ஜி மின்சார ஆட்டோவை வாங்குவதில் எந்த தடையும் இருக்காது என தெரிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மற்றும் டூ-வீலர்களுக்கு அடுத்தபடியாக மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்சாக்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் மோந்த்ரா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் நோக்கிலேயே ஒமெகா செய்கி நிறுவனம் இந்த புதிய ஆட்டோவை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் சிறப்பம்சங்கள் பிரீமியம் மின்சார கார்களுக்கு சவால் விடும் வகையில் இருப்பதால் பலர் இ-கார்களுக்கு இந்த ஆட்டோவையே வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

FAQs
நடைமுறை வாழ்க்கையில் இது எவ்வளவு ரேஞ்ச் தரும்?

நிறுவனம் ஓர் ஃபுல் சார்ஜில் 300 கிமீ வரை ரேஞ்ச் தரும் என தெரிவித்திருக்கின்றது. நடைமுறை வாழ்க்கையில் டிராஃபிக் உள்ளிட்ட தடைகள் மிக அதிகம். ஆகையால், 250 கிமீ வரை இது ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தினசரி பயன்பாட்டிற்கு உகந்த இ-ஆட்டோவா இது?

தயாரிப்பு நிறுவனம் இதனை தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாகவே தயார் செய்திருக்கின்றது. இதற்கேற்ப அதன் இருக்கைகள் மற்றும் அதிகம் ரேஞ்ச் தரும் திறன் இருக்கின்றன.

இதை சார்ஜ் செய்வது சுலபமானதா?

சந்தேகமே வேண்டாம், உங்கள் வீட்டுக்கு அருகில் அல்லது நீங்கள் பயணிக்கும் ரூட்டில் சார்ஜிங் பாயிண்ட் இருந்தால் போதும், இதை சுலபமாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இரவில் வீட்டிலும், பகலில் அதி வேக சார்ஜிங் பாயிண்டைப் பயன்படுத்தினால் தடையே இல்லாமல் சவாரிகளுக்குச் செல்ல முடியும்.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 18:28 [IST]
English summary
Omega seiki nrg electric three wheeler launched at rs 3 55 lakh with 300 km range
மேலும்... #electric car #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+