தக் லைஃப் பிரச்னைல இருக்கப்ப அந்த படத்தோட நடிகருக்கு வந்த வாழ்வை பாருங்க! பெரிய கம்பெனியை புடிச்சுட்டாரு!
தென் கொரியாவை (South Korea) சேர்ந்த ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. உலகின் 193 நாடுகளில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் விற்பனையாகி கொண்டுள்ளன. இதில் இந்தியா, ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 50 ஆயிரம் கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என ஹூண்டாய் நிறுவனம் விரும்புகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை ஹூண்டாய் நிறுவனம் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பங்கஜ் திரிபாதியை (Pankaj Tripathi) தற்போது ஹூண்டாய் இந்தியா நிறுவனம் பிராண்ட் அம்பாஸிடர் (Brand Ambassador) ஆக நியமனம் செய்துள்ளது. இவர் இந்தியா முழுக்க பிரபலமாக உள்ள ஒரு நடிகர் ஆவார். ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பங்கஜ் திரிபாதி நடித்து கொண்டுள்ளார்.
பீஹார் (Bihar) மாநிலத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவரான பங்கஜ் திரிபாதி தற்போது தனது திறமையான நடிப்பின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான நடிகராக மாறியுள்ளார். வரும் ஜூன் 5ம் தேதி (June 5) வெளியாகவுள்ள தக் லைஃப் (Thug Life) படத்திலும் கூட பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார்.

கமல் ஹாசன் (Kamal Haasan) உள்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் தற்போது கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கமல் ஹாசன் பேசியதற்கு, கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில்தான், பங்கஜ் திரிபாதி ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது நியமனம் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களை மேலும் பிரபலமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பங்கஜ் திரிபாதி கூறுகையில், ''என்னுடைய முதல் கார் ஹூண்டாய் நிறுவனத்துடையதுதான். நம்பிக்கை, புதுமை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான முன்னுரிமை ஆகிய காரணங்களுக்காக நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடர் ஆக நியமனம் செய்யப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த மரியாதை'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய மக்கள் மத்தியில் நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு நல்ல மரியாதை உள்ளது. அப்படிப்பட்ட ஒருவர் பிராண்ட் அம்பாஸிடர் ஆக நியமனம் செய்யப்பட்டிருப்பது, வரும் காலங்களில் இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவன கார்களின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.
இந்த நேரத்தில் பிராண்ட் அம்பாஸிடர்களின் பணி என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். பிராண்ட் அம்பாஸிடர் ஆக இருப்பவர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு பாஸிட்டிவ்-ஆன எண்ணம் ஏற்பட பணியாற்றுவார். சமூக வலை தளங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கேம்பெயின்கள் மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துடைய தயாரிப்புகளின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதும் அவர்களின் பணியாகும்.


Click it and Unblock the Notifications








