ஆட்டோ எக்ஸ்போவில் மோடி பேசியதை கேட்டா என்ன ஆவீங்கன்னே தெரியாது! அப்படி என்ன பேசினாரு தெரியுமா?
இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. பிரதமர் மோடி இந்த கண்காட்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஆட்டோமொபைல் உற்பத்தியார்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது இந்தியா ஆட்டோமொபைல் துறையில் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது. இது இந்தியா நாட்டின் வளர்ச்சியை எப்படி பிரதிபலிக்கிறது என பேசினார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கிய நிகழ்வாக இன்று துவங்கிய பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்தியாவில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கலந்து கொண்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த பிரதமர் மோடி அவர்கள் முன்பு உரையாற்றினார். அதில் சில முக்கியமான தகவல்களை பேசினார்.

பிரதமர் மோடி பேசியதாவது: " இந்த தருணத்தில் ரத்தன் டாடா, மற்றும் ஒசாமு சுஸூகி ஆகியோரை நினைவுகொள்கிறோம். இருவரும் இந்தியாவில் ஆட்டோமொபைல் செக்டார் வளர்ச்சியடைய முிக முக்கியமான காரணமாக இருந்துள்ளனர். மிடில் கிளாஸ் மக்களின் கனவுகளை நினைவாக்க இருவரது உழைப்பும் மிகப்பெரியது. இவர்களது உழைப்பு தொடர்ந்து இந்தியாவில் ஆட்டோமொபைல் செக்டாரை வளர்க்கும்.
இந்தியாவில் உள்ள 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்துவிட்டனர் என்பதை ஆட்டேமொபைல் துறை தான் காட்டியுள்ளது. 25 கோடி மக்கள் தற்போது சொந்தமாக வாகனம் வாங்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளனர். வாகனம் பயன்படுத்தும் அளவிற்கு அவர்களது வாழ்வாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை 12 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது கடந்தாண்டு நிகழ்ந்த வளர்ச்சியாகும். நடுத்தர பொருளாதார வசதி கொண்ட குடும்பங்களின் வளர்ச்சி, விரைவான போக்குவரத்து, குறைந்த விலையில் வாகனங்கள் என ஆட்டோமொபைல் துறை இந்தியாவில் பல பரிமாணங்களில் வளர்ச்சிடைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே ஆண்டில் 2.5 கோடி கார்கள் விற்பனையாகியுள்ளது. இது இந்தியாவில் வளர்ந்து வரும் வாகனங்களுக்கான தேவையை எடுத்துகாட்டுகிறது. தற்போது இந்தியா உலகிலேயே ஆட்டோமொபைல் துறையில் 3வது பெரிய நாடாக மாறியுள்ளது. இந்தியாவில் சாலைகள் மோசம் என்ற காரணத்திற்காகவே பலர் கார் வாங்காமல் இருந்தனர்.
ஆனால் இந்த சூழ்நிலையும் தற்போது மாறிவருகிறது. இந்திய மக்கள் இனி வேகமாகவும், வசதியாகவும் பயணிக்க வேண்டும் என்பதை தான் அரசு நோக்கமாக கொண்டுள்ளது. கடந்தாண்டு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவின் போக்குவரத்து கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது." என்று பேசினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வளர்ந்து வரும் வாகன விற்பனை இந்திய மக்கள் மத்தியில் வாகனத்திற்கான தேவை அதிகரித்துள்ளதை காட்டுகிறது. அதே நேரம் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு வாகனத்தின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. பிரதமர் சொன்னதுபடி வாகனம் வாங்கியதால் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்திருப்பதாக கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?


Click it and Unblock the Notifications








