10 லட்சம் பேர் இந்த காஸ்ட்லியான காரை வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்னங்க இருக்குது?
போர்ஷே நிறுவனம் மேக்கன் காரின் விற்பனையில் புதிய வரலாற்று மைல்கல்லை படைத்துள்ளது. இந்த கார் தான் அந்த பிராண்டிலேயே அதிகம் விற்பவனையாகும் காராக மாறியுள்ளது. இந்த காரின் விலை அதிகமாக இருந்தும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
போர்ஷே நிறுவனம் உலகம் முழுவதும் லக்ஸரியான கார்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் மேக்கன் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் காஸ்ட்லியான காராக இருந்தாலும் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 12 ஆண்டில் மொத்தம் 10 லட்சம் கார்களை விற்பனவை செய்து அந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது. போர்ஷே நிறுவனம் விற்பனை செய்யும் மற்ற கார்கள் கூட இந்தளவிற்கு விற்பனவை பெற நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. அந்நிறுவனத்தின் பிரபலமான 911 என்ற கார் 10 லட்சம் கார் என்ற இலக்கை எட்ட 54 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால் இந்த கார் 12 ஆண்டுகளிலேயே இந்த இலக்கை எட்டி பிடித்துள்ளது.
போர்ஷே மேக்கன் கார் கடந்த 2013ம் ஆண்டு தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிறுவனம் ஜெர்மனியில் நடத்தி வரும் ஆலையில் தான் இந்த கார் தயாராகி வருகிறது. இந்த கார் அறிமுகமானது முதல் வேகமாக விற்பனையாகி வரும் காராக மாறியது. போர்ஷே நிறுவனத்தின் கேய்யன் கார் கூட 10 லட்சம் கார்கள் விற்க 18 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. போர்ஷே நிறுவனம் 10 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இந்த 3 கார்களை மட்டுமே இதுவரை செய்துள்ளது.

இந்த கார் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு வெர்ஷன்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 261 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6.4 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த இன்ஜின் 7 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சம் 232 கி.மீ வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர்ஷே நிறுவனம் விரைவில் தனது பெட்ரோல் வெர்ஷன் காரை விற்பனையிலிருந்து நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனம் எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

போர்ஷே மேக்கன் எலெக்ட்ரிக் காரில் 100kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் இந்த கார் அதிகபட்சம் 641 கிமீ வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வேரியன்டை பொருத்து மாறுபடும். இந்த கார் மொத்தம் 3 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வரகுிறது. மேக்கன் ஸ்டாண்டர்டு, மேக்கன் 4எஸ், மேக்கன் டர்போ என்ற பெயர்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.
மேக்கன் காரின் விலையை பொருத்தவரை இந்தியாவின் அதன் பெட்ரோல் இன்ஜின் கார் ரூ88.06 லட்சம் என்ற விலையிலும் அதே நேரம் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் ரூ1.21 கோடி என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த விலைகள் எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலைகளில் தான் விற்பனையாகி வருகிறது. ஆன்ரோடு விலை இதை விட அதிகமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போர்ஷே நிறுவனம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விலை அதிகமாக உள்ளதால் பணக்காரர்கள் மட்டுமே இந்த காரை வாங்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இருந்தாலும் இவ்வளவு அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளது. நிச்சயம் பெரிய விஷயம் தான்.


Click it and Unblock the Notifications









