2 கிட்னியையும் வித்தா கூட இந்த காரை வாங்க முடியாது! இவ்வளவு விலை சொல்ற அளவுக்கு இந்த கார்ல என்ன இருக்குது?

போர்ஷே நிறுவனம் தனது டேக்கன் 4 எஸ் என்ற காரை கருப்பு நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ2.07 கோடி என்ற விலையில் இந்த காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந் கார் கேய்யன் பிளாட் எடிசன் போ இந்த காரின் பிளாக் எடிசன் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

போர்ஷே நிறுவனம் பிரிமியம் ரக காஸ்ட்லியான கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்களுக்க சமூகத்தில் நல்ல மரியாதையும், அந்தஸ்தும் கிடைக்கிறது. இந்நிலையில் போர்ஷே நிறுவனம் தனது டேக்கன் 4 எஸ் என்ற காரின் கருப்பு நிற எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Porsche Taycan 4S Black Edition

அந்நிறுவனம் கேய்யன் காரின் கருப்பு எடிசனில் உள்ளதை போல வெளிபுறத்திலும், உட்புறத்திலும் சிறிய ரக மாற்றத்தை செய்துள்ளது. இந்த காரில் பல்வேறு வெளிப்புற கலர் ஆப்ஷன்கள் உள்ளன. முக்கியமாக 11 காம்பிளிமென்டரி ஆப்ஷன்கள் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் வழங்கப்படுகிறது. இந்த கார் ரூ2.07 கோடி என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விலை அதன் ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ11 லட்சம் அதிகமான விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளுது. இந்த காரில் 105kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 668 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இந்த காரில் 2 மோட்டார் மூலம் 4 வீல்களுக்கும் பவர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த கார் 598 பிஎச்பி பவரையும், 710 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இ்நத கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.7 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது.

Porsche Taycan 4S Black Edition

இந்த காரில் 320KW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த கார் 18 நிமிடத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றிவிடுகிறது இந்த காரின் வடிவமைப்பில் ஹைகிளாஸ் ஃபினிஷ் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளுது. இது போக சைடு ஸ்கிரிட்ஸ், பின்பக்க டிஃப்யூஸர், பின்பக்க வியூ கண்ணாடி, 21 இன்ச் ஆரோ டிசைன் , கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல், என ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த காரில் மொத்தம் 13 விதமான வெளிப்புற கலர் ஆப்ஷன்கள் உள்ளன. கருப்பு, வெள்ளை, ஜெட் பிளாக் மெட்டாலிக், ஐஸ் கிரே மெட்டாலிக், வால்கனோ கிரே மெட்டாலிக், டோலோமைட் சில்வர் மெட்டாலிக், ஜெனிட்டன் ப்ளூ மெட்டாலிக், கார்மைன் ரெட், ப்ரோவென்ஸ், நெப்டியூன் ப்ளூ, ஃபிரான்ஸ்பெர்ரி மெட்டாலிக், ஃப்ரோஸரன் ஃப்ளு மெட்டாலிக், பர்பிள் ஸ்கை மெட்டாலிக் ஆகிய கார் ஆப்ஷன்கள் உள்ளன. மற்ற கலர் ஆப்ஷன்களை ரூ5.11 லட்சம் முதல் ரூ32.18 லட்சம் கூடுதல் விலை கொடுத்து வாங்கிக்கொள்ள முடியும்.

Porsche Taycan 4S Black Edition

இந்த காரில் ஸ்டாண்ட்ர்டு மாடலில் உள்ள அதே அம்சங்கள் உள்ளன. பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரிகேமரா, 14 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க சீட்டுகள், 4 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், 710 வாட்ஸ் 14 ஸ்ப்பீக்கர் ஃபோஸ் சவுண்ட் சிஸ்டம், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போர்ஷே கார் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகவில்லை என்றாலும் நன்மதிப்பை பெற்றுள்ளது.இந்த கார் ரூ2 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் கிட்னிகளை விற்றால் கூட இந்த காரை வாங்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

More from DriveSpark

Article Published On: Friday, July 18, 2025, 23:45 [IST]
English summary
Porsche taycan 4s black edition launch price 2 07 crore
மேலும்... #porsche #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X