2026ல் வரப்போகும் பிரிமியம் செடான் கார்கள் இதான்! லிஸ்ட் செமயா இருக்குதே!

இந்தியாவில் ஒரு பக்கம் செடான் கார்களுக்கான டிமாண்ட் குறைந்து கொண்டே வந்தாலும், சிலர் செடான் கார்களை அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிலரின் கார்களை முற்றிலுமாக விட்டு விடாமல் அதை தொடர்ந்து அப்டேட் செய்து நவீனப்படுத்தி வருகிறது. இதன் மூலம் தான் செக்மெண்ட்டை உயிர்ப்பித்து வருகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த கார்கள் அதிகம் விற்பனையாக வாய்ப்புள்ளது என்ற கருத்தும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2026ம் ஆண்டு வெளியாக உள்ள டாப் 10 செடான் கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா காரை மிட்-லைஃப் பேஸ்லிப்ட் அப்டேட்டை 2026ம் ஆண்டு கொண்டு வருகிறது. இந்த அப்டேட்டில் முன்பக்க ஸ்டைலிங் மாற்றம் செய்யப்படுகிறது. கேபின் பகுதியிலும் சில மாற்றங்கள் வர உள்ளன. இதுபோக புதிய அம்சங்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சிறிய கார்களில் இருந்து எடுக்கப்பட்டு இதில் பொருத்தப்படுகிறது. இந்த காரின் உள்ளே டூயல் ஸ்கிரீன் சிஸ்டம் பொருத்தப்பட்டு நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. மெக்கானிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் இல்லாமல் தற்போது உள்ள அதே 1.5 லிட்டர் இன்ஜின் இதில் பொருத்தப்படுகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ ஜிடிஏ இன்ஜின் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் டர்போ இன்ஜின் ஆப்ஷன் 157.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் சிட்டி பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த இன்ஜின்கள் மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. டர்போ இஞ்சின் டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

Premium Sedans Cars

ஸ்கோடா ஸ்லாவியா

ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா காரை இந்த 2020ம் ஆண்டு அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது. அடாஸ் உள்ளிட்ட ஹைவே பயணத்திற்கு ஏற்ற அம்சங்கள் அப்டேட்டில் வர உள்ளதாக தெரிகிறது. இந்த காரில் பாதுகாப்பு மற்றும் டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம் மேம்படுத்தப்படுகிறது. இந்த காரிலும் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கிறது. இதில் 1.0 லிட்டர் இன்ஜின் 114 பிஎச்பி பவரையும் 1.5 லிட்டர் இன்ஜின் 148 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. மேலும் இந்த காரின் உள்ளே பெரிய ஸ்கிரீன் மற்றும் கனெக்டெட் கார் அம்சங்களும் இடம் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி காரை இந்த 2026ம் ஆண்டு அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனத்தின் ஹைபிரிட் காரான சிட்டி என்ற காரை அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் 126 பிஎச்பி பவர் கொண்ட இன்ஜினுடன் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த காரின் முகப்பு பகுதியில் பின் பகுதியிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. உட்பகுதியில் உள்ள வடிவமைப்பு சற்று கிளீனான வடிவமைப்பாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் ஸ்டிராங் ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Premium Sedans Cars

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் என்ற காரை இந்த ஆண்டு அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா காரில் வரும் அப்டேட் போல இந்த காரிலும் சில அப்டேட்கள் இடம் பெறுகிறது. முக்கியமாக இதன் கேபின் பகுதி அப்டேட் செய்யப்படுகிறது. இதுபோக பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. மேலும் இந்த காரில் இரண்டு டர்போ இன்ஜின் ஆப்ஷன்கள் இடம்பெறுகிறது. 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் மற்றும் 1.5 டிஎஸ்ஐ இன்ஜின் இடம்பெறுகிறது. இதில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு பிரிஸ்கான பெர்பார்மென்ஸை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காரில் போட்டித் தன்மைக்கு ஏற்ப நவீன பாதுகாப்பு அம்சங்களான அடாஸ் தொழில்நுட்பத்தையும் டுயல் ஸ்கிரீன் லேஅவுட்டை உட்புறத்திலும் புகுத்தி எப்படி ஸ்லாவியா கார் அப்டேட் செய்யப்படுகிறதோ அதே போலவே இந்த காரும் அப்டேட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Premium Sedans Cars

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் கார்களுக்கான டிமாண்ட் குறைவாக இருந்தாலும், மக்கள் மத்தியில் இன்னும் இந்த கார்களுக்கான மதிப்பு இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் இந்த கார்கள் விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கலாம். இதன் காரணமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை குறைவாக இருந்தாலும் இந்த கார்களை தொடர்ந்து அப்டேட் செய்து வருகின்றன. மார்க்கெட்டில் தனக்கென ஒரு எண்ணத்தை இடத்தை பிடிப்பதற்காக இந்த கார்கள் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த பட்டியலில் உங்களுக்கு பிடித்த காரை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 30, 2025, 10:45 [IST]
English summary
Premium sedans cars launching in india 2026
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X