இளவரசர் ஓட்டி பார்த்த இந்த 2 கார்களும் இன்னும் விற்பனைக்கே வரல.. இவர் மட்டுமல்ல இந்த உலகமே வியக்கபோகுது!

உதய்பூர் இளவரசர் இன்னும் விற்பனைக்கே வராத ரெண்டு புதுமுக கார் மாடல்களை ஓட்டி பார்த்துவிட்டு வியந்து போய்விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த இரண்டு கார் மாடல்களும் மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும். எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) இந்த கார்களையே உதய்பூர் இளவரசர் சமீபத்தில் ஓட்டி பார்த்திருக்கின்றார். தொடர்ந்து இந்த கார்களை ஓட்டிய அனுபவத்தை அவர் தற்போது பகிர்ந்து உள்ளார்.

ரைடு அனுபவத்தை பகிர்ந்து இருக்கின்றார் என்று கூறுவதற்கு பதிலாக, அந்த காரை புகழ்ந்து தள்ளிவிட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இரண்டு கார்களையும் மிகப் பெரிய அளவில் அவர் பாராட்டி இருக்கின்றார். அப்படி என்ன அவர் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த கார்கள் பற்றி கூறினார் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Prince of udaipur reviews mahindra ev s

மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த இரண்டு கார் மாடல்களும் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி ரக கார் மாடல்கள் ஆகும். இதன் விலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. இத்துடன், டெஸ்ட் டிரைவ் பணிகளும் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றில் தொடங்கிவிட்டன. ஆனால், புக்கிங் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

நாளை மறுநாளே (பிப்ரவரி 14) இந்த கார்களுக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இதேபோல், இந்த காரின் டெலிவரி பணிகளும் வருகின்ற மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே உதய்பூர் இளவரசர் லக்ஷ்யராஜ் சிங் மேவார் இந்த ரெண்டு கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்திருக்கின்றார்.

இதற்கு பின்னரே அந்த கார்களை அவர் புகழ்ந்து பாட தொடங்கி இருக்கின்றார். குறிப்பாக, அது பார்க்க மிகவும் அழகாக இருப்பதாக அவர் கருத்து தெரிவித்திருக்கின்றார். மேலும், ரெண்டு கார்களும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருப்பதை பார்த்து தன் பிள்ளைகள் இந்த வாகனத்தை ஏலியன்களின் வாகனம் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய முற்றிலும் மாறுபட்ட ஸ்டைல் கொண்ட வாகனத்தை இந்திய நிறுவனம் தயாரித்திருப்பதைப் பார்த்து தான் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கின்றார். இது இந்த காரின் உட்பக்கமும் அவரை மிகப் பெரிய வியப்பில் கவர்ந்திருக்கின்றது. அவ்வளவு பெரிய உதய்பூர் அரண்மனையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இளவரசரை கவரும் அளவிற்கே இந்த கார்களின் உட்பக்கத்தை மஹிந்திரா செய்திருக்கின்றது.

Mahindra ev s

ஆகையால், இந்தியாவில் நடுத்தர மக்கள் மற்றும் செல்வம் கொழித்த மக்கள் என பலதரப்பட்ட சமூகத்தினரை மஹிந்திராவின் இந்த புதுமுக கார்கள் தன் பக்கம் வளைத்து போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்பவே மிக அதிக சிறப்புகளை இந்த காரின் உட்பக்கம் தாங்கி உள்ளது.

உதய்பூர் இளவரசரின் செயல் ஒட்டுமொத்தமாக இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப் பெரிய விளம்பரத்தை தேடி கொடுக்கும் வகையில் அமைந்து இருக்கின்றது. சொல்லப்போனால் மஹிந்திரா நிறுவனத்திற்கு கிடைத்த இலவச விளம்பரமாகவே உதய்பூர் இளவரசர் வெளியிட்டு இருக்கும் வீடியோ அமைந்திருக்கின்றது. அவர் கார் பற்றிய அனுபவத்தை விவரிக்கும் வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் என்பது குறிபிடத்தகுந்தது.

எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் மாடலுக்கு ரூ. 21.90 லட்சம் தொடங்கி ரூ. 30.50 லட்சம் என்கிற விலையும், பிஇ 6 மாடலுக்கு ரூ. 18.90 லட்சம் தொடங்கி ரூ. 26.90 லட்சம் என்கிற விலையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

இந்த கார் மாடல்களின் ஆரம்ப நிலை தேர்வுகளில் 59 kWh பேட்டரி பேக்கும், உயர் நிலை வேரியண்டுகளில் 79 kWh பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அவை ஓர் முழு சார்ஜில் 542 கிமீ முதல் 656 கிமீ வரையில் ரேஞ்ச் தரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உதய்பூர் இளவரசர் மட்டுமில்லைங்க தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும்கூட இந்த மஹிந்திராவின் எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 எலெக்ட்ரிக் கார்களைக் கண்டு வியந்து போய்விட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. இவர்கள் மட்டுமல்ல இந்த உலகமே இந்த காரை பார்த்து வியந்துக் கொண்டிருக்கின்றது. அந்த அளவிற்கே தனித்துவமான ஸ்டைலை அவைக் கொண்டிருக்கின்றன. எனவே மஹிந்திரா நிறுவனத்தின் இந்த இரண்டு புதுமுக எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார்களும் விற்பனையில் மாபெரும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 12, 2025, 19:50 [IST]
English summary
Prince of udaipur s insights on mahindra s be6 and xev 9e highlighting their design features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+