தகுதி சுற்றில் 7ம் இடத்தை பிடித்த நடிகர் அஜித்.. போற போக்கை பார்த்தா சினிமாவை முழுசா கை கழுவிவிடுவார் போலையே!

மிஷ்லின் 24 ஹவர்ஸ் துபாய் (Michelin 24H Dubai) கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்குமார் அவரது அஜித் குமார் ரேசிங் குழு சார்பில் கலந்து வருகின்றார். இந்த போட்டிக்கான தகுதி சுற்றே இன்று (ஜனவரி 10) நடைபெற்றது. இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கின்றார். இது அவரது ரேசிங் திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்த போட்டியின் இறுதியில் குறிப்பிடத்தக்க சாதனையை அவர் படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அஜித், இந்த தகுதி சுற்றில் ஏழாவது இடத்தைப் பிடித்திருப்பது அவரது ரேஸ் குழுவை மட்டுமல்ல அவரது ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. 2.03.476 நிமிடங்கள் என்கிற கால இடைவெளியில் இலக்கை அடைந்தே அவர் இந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார். சிறு வயது முதலே வாகனங்கள் மீதும், ரேஸ் மீதும் அதீத ஆர்வம் கொண்டவராக நடிகர் அஜித் குமார் காட்சியளிக்கின்றார்.

மேலும், அவர் தன்னுடைய 18 வயதிலேயே முதன் முதலில் ரேஸில் ஈடுபட்டார். இதற்கு பின்னர் சினிமாவிற்கு வந்துவிட்டதால் அவரால் சரிவர ரேசில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையிலேயே அவர் தற்போது நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தற்போது மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்கி இருக்கின்றார்.

தன்னுடைய 18 வயதுக்கு பின்னர் 2010ஆம் ஆண்டில் ஐரோப்பியன் 2 போட்டியிலேயே அவர் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் கலந்துக் கொண்டார். இதற்கு பின்னர் அவர் எந்தவொரு போட்டியிலும் கலந்துக் கொள்ளவே இல்லை. இந்த நிலையிலேயே மீண்டும் ரேசிங்கில் களமிறங்கும் விதமாக சமீபத்தில் ஓர் ரேசிங் குழுவை அவர் உருவாக்கினார்.

Qualifying race ajith finishes 7th place

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே தன்னுடைய ரேஸ் குழுவான அஜித்குமார் ரேஸ்-ஐ அவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்தே உலக புகழ் பெற்ற 24 ஹவர்ஸ் துபாய் கார் ரேஸ் பந்தயத்தில் அவர் கலந்துக் கொண்டிருக்கின்றார். இந்த ரேஸ் பந்தயம் மட்டுமின்றி விரைவில் இன்னும் பல கார் பந்தயங்களில் அவர் கலந்துக் கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.

அந்தவகையில், ஆசிய ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப், பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப் மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளிலும் அவர் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த போட்டிகள் முடிவடையும் வரை அஜித் சினிமாவிற்கு வர மாட்டார் என கூறப்படுகின்றது.

Ajith race car

ஆமாங்க, சிறிது காலம் சினிமாவிற்கு அவர் ஓய்வுக் கொடுத்திருக்கின்றார். இந்த போட்டிகள் அனைத்தும் முடிவடைய சுமார் 9 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகின்றது. அதை அஜித்குமார் நடிக்க மாட்டார் என அவரே தெரிவித்திருக்கின்றார். இதன் வாயிலாக இப்போது அஜித்திற்கு நடிப்பைவிட கார் ரேஸ் மீது அதிகம் ஆர்வம் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

இது அஜித்தின் அடுத்த படத்திற்கான அப்டேட்டை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அஜித் நடித்திருக்கும் விடா முயற்சி திரைப்படம் விரைவில் திரைகளுக்கு வர இருக்கின்றது. பொங்கல் வெளியீடாக அது திரையிடப்பட இருக்கின்றது. இதேபோல், குட் பேட் அக்லீ படம் கோடை விடுமுறையில் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Qualifying race ajith finishes 7th place

தற்போது தொடங்கி இருக்கும் 24 ஹவர்ஸ் துபாய் போட்டியின் முக்கிய தொடர்கள் 11 ஜனவரி அன்றே தொடங்க இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, இன்று இரவு 12.00 மணிக்கு அது தொடங்க உள்ளது. அஜித்தின் படங்களைக் காண காத்திருந்ததைப் போல அஜித்தின் இந்த கார் பந்தயத்தைக் காணவும் அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிப்பைபோலவே கார் ரேசிங்கிலும் அதீத ஆர்வமிக்கவராக அஜித் குமார் உள்ளார். அவரின் இந்த காதலே தற்போது நடிப்பிற்கு ஓய்வுக் கொடுத்துவிட்டு ரேசிங்கில் ஈடுபட செய்ய செய்திருக்கின்றது. நடிப்பைப் போலவே ரேசிங்கிலும் அவர் மிகப் பெரிய உச்சத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 10, 2025, 20:21 [IST]
English summary
Qualifying race ajith finishes 7th in the michelin 24h dubai
மேலும்... #car race
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X