ஜூலைக்கு பிறகு எலெக்ட்ரிக் வாகன விலை எக்குதப்பா ஏறப்போகுது? சீனா வேலைய காட்ட ஆரம்பிச்சிடுச்சு!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் தயாரிக்க துவங்கிவிட்டனர். இந்நிலையில் சீனா எடுத்துள்ள புதிய முடிவால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பெரும் அளவிற்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சீனா எடுத்த முடிவு என்ன? இது எப்படி இவி வாகன துறையை பாதிக்கிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பெட்ரோலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்களுக்கு நல்ல லாபமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் போது மக்களுக்கு மட்டுமல்லாமல் இயற்கைக்கும் மாசு வெகுவாக குறைகிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களை அரசுமு் ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் மூலப்பொருட்களை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகின்றனர்.

எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் மூலப்பெருட்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனா தற்போது ரேர் எர்த் மேக்னட் என்ற பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க இந்த மூலப்பொருள் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.
இந்த ரேர் எர்த் மேக்னட் மூலம் தான் எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் மோட்டார்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த மோட்டாருக்குள் இந்த மேக்னட் இருந்தால் தான் அது சிறப்பாக செயல்படும். பெரும்பான்மையான ரேர் எர்த் மேக்னட் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்படுகிறது. எலெக்ட்ரிக் மோட்டாரை வாங்கும் நிறுனவங்கள் இனி இந்த மேக்னட்டை மற்ற நாடுகளில் இருந்து தான் வாங்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

திடீரென சீனா நிறுவனத்திற்கு பதிலாக மற்ற நிறுவனத்தை தேடி தங்களுக்கான தேவையை வாகன தயாரிப்பு நிறுவனங்களால் பூர்த்தி செய்ய முடியாது. இதனால் வரும் ஜூலை மாதம் முதல் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுவாக இந்த மேக்னட்களை எல்லாம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கி ஸ்டாக் வைத்திருப்பார்கள். இந்த ஸ்டாக் காலியாகும் வரை தயாரிப்புகளில் எந்த தொய்வும் இருக்காது.
இனி மற்ற நாடுகளில் இந்த தயாரிப்பை பெற ஒப்பந்தம் செய்து வாங்க வேண்டும். எவ்வளவு வேகமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதை செய்கிறார்களோ அவ்வளவு வேகமாக இந்த பாதிப்பிலிருந்து அவர்களால் மீண்டு வர முடியும். இதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகள் தொய்வடையும். தற்போது வரை இது மிக மோசமான நிலையை அடையவில்லை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மாற்ற வழியை தேட துவங்கிவிட்டனர்.

தற்போது உலகில் உள்ள ரேர் எர்த் மேக்னட் தயாரிப்பில் சீனா தான் 90 சதவீத மார்கெட் பங்கை வைத்துள்ளது. இனி மீதி உள்ள 10 சதவீத மார்கெட்டை தான் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நாட வேண்டும் என்பதால் இந்த பொருளுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்ட விலை அதிகமாக வாய்ப்புள்ளது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் அதிகமாக வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பிரச்சனை இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல சர்வதேச அளவில் உள்ள பிரச்சனையாக இருக்கப்போகிறது. சர்வதேச அளவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை அதிகமாக வாய்ப்புள்ளது. இதனால் மற்ற நாடுகளில் இதில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்தால் இவி தொழில் விலை உயர்வில் இருந்து தப்பிக்கும்.


Click it and Unblock the Notifications









