2025ல் இந்த அம்சம் கொண்டிருக்கும் காருக்குதான் டிமாண்ட் அதிகமாக கிடைக்க போகுது! சன்ரூஃபோ வேறு எந்த அம்சமோ இல்ல

புதிய தொழில்நுட்பங்களுக்கு பேராதரவை வழங்கக் கூடியவர்களே இந்தியர்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக சன்ரூஃப், பெரிய திரை மற்றும் அடாஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் கார்களுக்கு இந்தியாவில் மிக சிறந்த வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இப்போது வேறொரு புதிய வசதிக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் கிடைக்கத் தொடங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. வெண்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கையே அதுவாகும். இந்த அம்சம் பழசாச்சே, நிறைய கார்களில் ஏற்கனவே வழங்கத் தொடங்கிட்டாங்களே என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் பெரும்பாலான கார்களில் இந்த அம்சம் முன்னிருக்கையாளர்களை மையப்படுத்தி மட்டுமே வழங்கப்படுகின்றது. பின்னிருக்கையாளர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படுவதில்லை. இந்த குறையையே சில வாகன உற்பத்தியாளர்கள் தற்போது போக்கத் தொடங்கி இருக்கின்றனர். அதாவது பின்னிருக்கையாளர்களுக்கும் வெண்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கையை சிலர் வழங்கத் தொடங்கி இருக்கின்றனர்.

The most demanded feature in 2025 revealed

அந்தவகையில், முதல் முறையாக தன்னுடைய பட்ஜெட் காரில் பின்னிருக்கையாளர்களுக்கும் வெண்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கையை வழங்கி இருக்கின்றது கியா (Kia) நிறுவனம். அது சமீபத்தில் சிரோஸ் (Syros) எனும் கார் மாடலை வெளியீடு செய்தது. இது ஓர் 'டால்பாய்' உருவ அமைப்பைக் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும்.

இந்த காரிலேயே பின்னிருக்கையாளர்களுக்கும் வெண்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த இருக்கையை லேசாக பின்னோக்கியும் நகர்த்திக் கொள்ள முடியும். இந்த அம்சத்திற்காகவே பெருமளவில் சிரோஸ் காரை இந்தியர்கள் புக் செய்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த காருக்கு இப்போதே புக்கிங் 20 ஆயிரத்தைக் கடந்திருக்கின்றது.

எனவே வரும் நாட்களில் பிற கார் உற்பத்தியாளர்களும் இந்த அம்சத்தை தங்களின் புதிய கார்களில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியா நிறுவனம் இந்த சிரோஸ் கார் மாடலில் வெண்டிலேஷன் வசதிக் கொண்ட பின்னிருக்கையை மட்டுமல்ல, அடாஸ் தொழில்நுட்பம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 12.3 அங்குல அளவுள்ள திரை உள்ளிட்ட வசதிகளையும் வழங்கி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல, பனோரமிக் சன்ரூஃப், பிளைன்ட் ஸ்பாட்டுகளைக் காண உதவும் திரை போன்ற பிரத்யேக அம்சங்களையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர். இதன் காரணத்தினாலும் அந்த காருக்கு அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், இதில் கூறப்பட்டு இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் சிரோஸ் கார் மாடலின் உயர்நிலை தேர்விலேயே வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

அதேநேரத்தில், இந்த மாபெரும் புக்கிங் எண்ணிக்கையைக் கருத்தில் மற்ற வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் புதுமுக கார்கள் அல்லது விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அப்டேட் செய்யப்பட்ட கார் மாடல்களிலும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி ஓர் கார் பின்னிருக்கையாளர்களுக்கென வெண்டிலேஷன் வசதியுடன் விற்பனைக்கு வரும்பட்சத்தில் அது கியா சிரோஸ்-க்கு மிகப் பெரிய போட்டியாக மாறும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் சன்ரூஃப் மற்றும் அடாஸ் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்ட காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வந்தநிலையில், தற்போது, இவற்றின் வரிசையில் வெண்டிலேஷன் இருக்கையும் இணைந்திருக்கின்றது. இதற்கு டிமாண்ட் அதிகரித்திருப்பதை உணர்ந்தே சிரோஸ் காரில் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த கார் விற்பனையில் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 30, 2025, 23:10 [IST]
English summary
Rear seat ventilation most demanded feature for 2025 here is example
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+