காரை புக் செய்தவர்களை 5-ஸ்டார் ஓட்டலுக்கு கூட்டிட்டு போனது இதுக்குதானா? நம்பி போனவங்களுக்கு இன்ப அதிர்ச்சி!!
பி.ஒய்.டி (BYD), சீனாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். இந்தியாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் விரைவாகவே பிஒய்டி நிறுவனம் கொண்டுவந்த சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் ஆகும்.
உலகளவில் எவ்வாறு முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனமாக உருவெடுத்தோம் என்பதை சில வருடங்களிலேயே இந்தியாவில் பிஒய்டி நிறுவனம் காட்டிவிட்டது. இந்தியாவில் கிட்டத்தட்ட முக்கிய நகரங்கள் மற்றும் குறு நகரங்களில் பிஒய்டி நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. அந்த வகையில் கேரளாவில் முதல் ஷோரூமை 2022ஆம் ஆண்டில் கொச்சிக்கு அருகே எர்ணாகுளத்தில் பிஒய்டி திறந்தது.

கேரளாவில் பல கார் நிறுவனங்களின் டீலர்ஷிப் ஷோரூம்களை கவனித்துக் கொள்ளும் இ.வி.எம் க்ரூப் (EVM Group) தான் பிஒய்டி நிறுவனத்தின் கார்கள் விற்பனையையும் கவனித்துக் கொள்கிறது. பிஒய்டி மற்றும் இவிஎம் கூட்டணியில் எர்ணாகுளத்தில் முதல் கேரள ஷோரூம் திறக்கப்பட்ட நிலையில், 2வது ஷோரூம் 2023இல் கோழிக்கோட்டில் திறக்கப்பட்டது. அதன்பின், 3வது பிஒய்டி ஷோரூம் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டது.
பிஒய்டி நிறுவனத்தின் கார் அசெம்பிள் தொழிற்சாலை ஆனது தமிழ்நாட்டில் திருவள்ளூரில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் சென்னையிலும், கோயம்புத்தூரிலும் மட்டுமே இரு ஷோரூம்கள் உள்ள நிலையில், கேரளாவில் 3 ஷோரூம்கள் உள்ளன. அந்த அளவிற்கு, பிஒய்டி எலக்ட்ரிக் கார்கள் என்று மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாகவே கேரளாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர்.

எந்த அளவிற்கு சிறப்பான வரவேற்பு என்றால், கேரளாவில் பிஒய்டி ஷோரூம் ஒன்றில் ஒரே நாளில் சுமார் 51 எலக்ட்ரிக் கார்கள் புக் செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி (Delivery) செய்யப்பட்டுள்ளன. இது, இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனையை செய்திருப்பது வேறு யாருமில்லை, கொச்சியின் எர்ணாக்குளத்தில் திறக்கப்பட்ட கேரளாவின் முதல் பிஒய்டி ஷோரூம் ஆகும்.
இவிஎம் க்ரூப் மூலமாக நிர்வகிக்கப்படும் இந்த பிஒய்டி ஷோரூமின் பெயர், இவிஎம் சவுத்காஸ்ட் பிஒய்டி (EVM Southcost BYD) ஆகும். இந்த ஷோரூமில் ஒரே நாளில் டெலிவிரி செய்யப்பட்ட 51 பிஒய்டி எலக்ட்ரிக் கார்கள் அனைத்தும் இந்த சீன எலக்ட்ரிக் கார் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சீலயன் 7 (SeaLion 7) எலக்ட்ரிக் கார் என கூறப்படுகிறது.
ஒரே நாளில் 51 பிஒய்டி எலக்ட்ரிக் கார்கள் டெலிவிரி செய்யப்படும் நிகழ்ச்சி ஆனது கொச்சியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்டது. 51 கார்களும் 51 கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இந்த 51 கஸ்டமர்கள் அதிகமாக கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோடு பகுதிகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். கஸ்டமர்கள் அனைவரும் ஷோரூமுக்கு பதிலாக 5-ஸ்டார் ஓட்டலுக்கு அழைக்கப்பட்டனர்.
இத்தகைய சிறப்புமிக்க நிகழ்வில் டெலிவிரி செய்யப்பட்டுள்ள பிஒய்டி சீலயன் 7 எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகம் ஆகும். பின்பக்கத்தில் சறுகலான மேற்கூரை கொண்ட கூபே-ஸ்டைலிலான எலக்ட்ரிக் எஸ்யூவி கார், பிஒய்டி சீலயன் 7 ஆகும். பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என இரு விதமான வேரியண்ட்களில் சீலயன் 7 விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.48.90 லட்சம் மற்றும் ரூ.54.90 லட்சமாக தற்சமயம் உள்ளன. காஸ்மோஸ் பிளாக், அரோரா வெள்ளை, அட்லாண்டிஸ் கிரே மற்றும் ஷார்க் கிரே என 4 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த எலக்ட்ரிக் காரை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 554கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என பிஒய்டி தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே நாளில் 51 கார்கள் ஒரே ஷோரூமில் இருந்து டெலிவிரி செய்யப்படுவது அரிதாக நடக்கக்கூடிய ஒன்றுதான். இருப்பினும், ஏறக்குறைய சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் கார்கள் ஒவ்வொன்றும் ஒரே நாளில் 51 யூனிட்கள் டெலிவிரி செய்யப்பட்டு இருப்பது, ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு விலை கொண்ட எலக்ட்ரிக் காரை வாங்குவதற்கும் நம் நாட்டில் இத்தனை பேர் உள்ளனரா என்றே கேட்க தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications








