ஒரு டஜனுக்கும் மேல கார் இருக்குது! இருந்தாலும் புது கார் வருது!

ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் மிட் சைஸ் செக்மெண்டில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே இந்த செக்மெண்டில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இந்த நிறுவனங்களும் போட்டியை மேலும் கடுமையாக்க திட்டமிட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் இந்தியாவில் ஏகப்பட்ட போட்டிகள் இருக்கிறது. இந்த செக்மெண்டில் மட்டும் தற்போது 13 கார்கள் விற்பனையாகி வருகிறது. சமீபத்தில் டாடா நிறுவனம்தனது சியாரா காரை அறிமுகப்படுத்தியது. மாருதி நிறுவனம் இந்த செக்மெண்டில் இரண்டாவது காராக விக்டோரிஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் 2026ல் தனது புதிய தயாரிப்புகளை இந்த செக்மெண்டில் களம் இறங்க திட்டமிட்டுள்ளது.

Renault And Nissan Mid size Suv

ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே தனது புதிய டஸ்டர் காரை வரும் ஜனவரி 26ம் தேதி விற்பனைக்கு கொண்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானாலும் கார் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சர்வதேச மார்கெட்டில் விற்பனையாகும் அதே மாடல் கார் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது. இந்தியாவிற்கு என சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.

3ம் தலைமுறை டஸ்டர் கார் சிஎம் எஃப் -பி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த கார் 4360 மிமீ நீளம், 2676 மிமீ வீல் பேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளுது. இ்நத கார் ஸ்மூத்தான டீசல் இன்ஜனின் உடன் இதற்கு முன்னர் விற்பனவையானது. ஆனால் வரப்போகும் புதிய கார் பெட்ரோல் இன்ஜினல் விற்பவனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

Renault And Nissan Mid size Suv

இதன்படி 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் பெட்ரோல்இன்ஜின் உடன் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இது போக 1.3 லிட்டர் எச்ஆர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. இது 154 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இது 6 ஸ்பீடு மேனுவல் மறஅறம் சிவிடி ஆட்டேமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது போக இந்தியாவிலேயே உருவாக்கப்படும் ஸ்டிராங்க் ஹைபிரிட் ஆப்ஷன் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இது போக நிஸான் நிறுவனம் மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் டெக்டான் என்ற காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இது டஸ்டரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரும் 2026ம் ஆண்டு முதல் பாதியிலேயே விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த காரின் வடிவமைப்பு சர்வதேச அளவில் விற்பனையாகும் பேட்ரோல் காரை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

டஸ்டர் காரை போலவே இதிலும் அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். ஆனால் வேரியன்ட் வாரியிலாக பார்க்கும் போது அம்சங்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளுது. இந்த காரில் 1.3 லிட்டர் டர்போது பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த கார் 154 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளியப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரபலமாகி வரும் மிட்சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் 13 மாடல் கார்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ள நிலையில் இந்த இரு நிறுவனங்களும் தலா ஒரு காரை களம் இறக்கினால் 15 காராகிவிடும். இதனால் விற்பனையில் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 30, 2025, 17:45 [IST]
English summary
Renault and nissan mid size suv new models india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+