ஷோரூமில் நிற்க கூட இடம் கிடைக்க போறது இல்ல! பலா பழத்தில் ஈ மொய்க்குற மாதிரி இந்த கம்பெனி கார்களை வாங்க போறாங்க

ரெனால்ட் (Renault), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனம். ஆனால், இந்தியாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாக போராடி வருகிறது. இந்தியாவில் ஒரு சமயத்தில் பல எண்ணிக்கைகளில் கார்களை விற்பனை செய்துவந்த ரெனால்ட் நிறுவனம் தற்சமயம் வெறும் 3 கார்களை மட்டுமே விற்பனை செய்கிறது. க்விட் (Kwid), டிரைபர் (Triber) மற்றும் கைகர் (Kiger) என்பன அந்த 3 ரெனால்ட் கார்கள் ஆகும். விற்பனை செய்வது வெறும் 3 கார்கள் மட்டும்தான் என்றாலும், அவை மூன்றிற்கும் ரெனால்ட் நிறுவனம் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த 3 ரெனால்ட் கார்களும் ஒவ்வொரு விதமான மதிப்பில் சலுகைகளை பெற்றுள்ளன. குறிப்பாக, அளவில் சிறியதான ரெனால்ட் கைகர் காருக்கு சுமார் ரூ.88,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த ஏப்ரல் மாதத்தில் ரெனால்ட் கார்களை எந்த அளவிற்கான சலுகைகள் உடன் வாங்கலாம் என்பதையும், இந்தியாவில் விற்பனையில் உள்ள 3 ரெனால்ட் கார்களை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

renault announced april month offers

ரெனால்ட் க்விட்: ரெனால்ட் நிறுவனத்தின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக க்விட் விளங்குகிறது. இதன் 2024 வெர்சனுக்கு ரூ.78,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 2024ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட க்விட் காரை சுமார் ரூ.78,000 வரையிலான சலுகைகள் உடன் வாங்கலாம்.

இதில், ரூ.40,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonus), ரூ.15,000 வரையிலான லாயலிட்டி போனஸ் (Loyalty Bonus), ரூ.8,000 வரையிலான கார்பிரேட் போனஸ் (Corporate Bonus) உள்ளிட்டவை அடங்குகின்றன. மறுப்பக்கம், இந்த 2025ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட க்விட் காரை அதிகப்பட்சமாக ரூ.48,000 வரையிலான சலுகைகள் உடன் வாங்கலாம்.

renault announced april month offers

இதில், ரூ.10,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.15,000 வரையிலான லாயலிட்டி போனஸ், ரூ.8,000 வரையிலான கார்பிரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதில், கார்ப்பிரேட் தள்ளுபடியை பெற முடியாதவர்கள் ரூ.4,000 மதிப்பிலான கிராமப்புற சலுகையை பெறலாம். மேலும், இந்த சலுகைகள் உடன் ரூ.3,000 மதிப்பிலான பரிந்துரைப்பு போனஸையும் க்விட் காரை வாங்குவோர் பெறலாம்.

இந்த சலுகைகளில், பணம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸை க்விட் காரின் விலை குறைவான ஆர்.எக்ஸ்.இ (RXE) மற்றும் ஆர்.எக்ஸ்.எல் (ஆப்ஷ்னல்) (RXL (O)) வேரியண்ட்களில் பெற முடியாது. இந்த வேரியண்ட்களில் மற்ற சலுகைகள் மட்டுமே கிடைக்கும். க்விட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.4.69 லட்சத்தில் இருந்து ரூ.6.44 லட்சம் வரையில் உள்ளன.

renault announced april month offers

ரெனால்ட் டிரைபர்: ரெனால்ட் நிறுவனத்தின் காம்பெக்ட் எம்பிவி (Compact MPV) ரக காராக டிரைபர் விளங்குகிறது. 4.2 மீட்டர்களில் இருந்து 4.4 மீட்டர்கள் வரையில் நீளம் கொண்டதாக விளங்கும் டிரைபர் ஆனது இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய எம்பிவி காராக உள்ளது. இருப்பினும், இந்த காரின் 2024 வெர்சனுக்கு ரூ.83,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், ரூ.40,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.15,000 வரையிலான லாயலிட்டி போனஸ், ரூ.8,000 வரையிலான கார்பிரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. 2025ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட டிரைபர் காரை இந்த ஏப்ரலில் ரூ.53,000 வரையிலான சலுகைகள் உடன் வாங்கலாம்.

renault announced april month offers

இதில், ரூ.10,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.15,000 வரையிலான லாயலிட்டி போனஸ், ரூ.8,000 வரையிலான கார்பிரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. கார்ப்பிரேட் போனஸுக்கு தகுதி இல்லாதவர்கள், ரூ.4,000 மதிப்பிலான கிராமப்புறத்திற்கான போனஸை இந்த காரிலும் பெறலாம்.

மேலும், டிரைபர் காரின் விலை குறைவான ஆர்.எக்ஸ்.இ வேரியண்ட்டில் பணம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸை பெற முடியாது. இவை இரண்டும் இல்லாமல், டிரைபர் ஆர்.எக்ஸ்.இ காரை ரூ.23,000 வரையிலான சலுகைகள் உடன் மட்டுமே வாங்க முடியும். டிரைபர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.09 லட்சத்தில் இருந்து ரூ.8.97 லட்சம் வரையில் உள்ளன.

renault announced april month offers

ரெனால்ட் கைகர்: ரெனால்ட் நிறுவனத்தின் ஒரேயொரு எஸ்யூவி (SUV) ரக காராக கைகர் விளங்குகிறது. இந்த காருக்கு தான் இந்த ஏப்ரல் மாதத்தை முன்னிட்டு அதிகப்படியான சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கைகர் காரை சுமார் ரூ.88,000 வரையிலான சலுகைகள் உடன் வாங்கலாம். இந்த ரூ.88,000 ஆனது 2024இல் உற்பத்தி செய்யப்பட்ட கைகர் காருக்கு ஆகும்.

இதில், சுமார் ரூ.45,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.15,000 வரையிலான லாயலிட்டி போனஸ், ரூ.8,000 வரையிலான கார்பிரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. 2025ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைகர் கார்களுக்கு ரூ.58,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், ரூ.15,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.15,000 வரையிலான லாயலிட்டி போனஸ், ரூ.8,000 வரையிலான கார்பிரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதில், கார்ப்பிரேட் தள்ளுபடியை பெறாதவர்கள் ரூ.4,000 மதிப்பிலான கிராமப்புற சலுகையை பெறலாம். மேலும், இந்த சலுகைகள் உடன் ரூ.3,000 மதிப்பிலான பரிந்துரைப்பு போனஸையும் க்விட் காரை வாங்குவோர் பெறலாம்.

கைகர் காரின் விலை குறைவான ஆர்.எக்ஸ்.இ (RXE) மற்றும் ஆர்.எக்ஸ்.எல் (RXL) வேரியண்ட்களில் வெறும் லாயலிட்டி போனஸை மட்டுமே பெற முடியும். லாயலிட்டி போனஸ் என்பது ஏற்கனவே ரெனால்ட் கார் வாங்கிய கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுவது ஆகும். கைகர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.09 லட்சத்தில் இருந்து ரூ.11.22 லட்சம் வரையில் உள்ளன.

renault announced april month offers

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் கார்களுக்கு ஐரோப்பாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், நம் இந்திய மக்கள் பெரியதாக ரெனால்ட் கார்களை கண்டு கொள்வது இல்லை என்பது அவற்றின் விற்பனை எண்ணிக்கைகள் மூலம் தெரிய வருகிறது. இத்தனைக்கும் இந்தியாவில் ரெனால்ட் விற்பனை செய்வது எல்லாமே விலை குறைவான கார்கள் ஆகும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் மாதத்திற்கான சலுகை ஆனது கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ரெனால்ட் கார்களை முடிந்தவரையில் விற்று தீர்ப்பதற்காக ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 4, 2025, 23:59 [IST]
English summary
Renault announced april month special offers for kwid triber kiger
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X