சென்னையில் 10,000 இன்ஜினியர்களுக்கு வேலை! வந்துடுச்சு புதிய ரொனல்ட் R&D சென்டர்!
ரெனால்ட் இந்தியா நிறுவனம் சென்னையில் தனது புதிய ஆய்வு மையத்தை திறந்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய கொள்கையான "ரெனால்ட்.ரீதிங்" என்ற கொள்கையின் கீழ் இந்த ஆய்வு மையம் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு மையத்தில் அந்நிறுவனம் இந்திய மார்கெட்டிற்காகவும் மற்றும் மற்ற சர்வதேச மார்கெட்டிற்காகவும் தனது வாகனங்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு கூடம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் நிறுவனம் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இந்நிறுவனம் தனது சர்வதேச அளவிலான கார்களுக்கான வடிவமைப்பை பிரான்ஸ் நாட்டில் மட்டுமே இதுவரை செய்து வருகிறது. இந்நிலையில் ஃபிரான்ஸ் நாட்டிற்கு வெளியே அந்நிறுவனம் தனது புதிய ஆய்வு கூடத்தை சென்னையில் தற்போது திறந்துள்ளது. அந்நிறுவனம் தற்போது தனது வாகன தயாரிப்பில் புதிய கொள்கையை பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளது. "ரெனால்ட். ரீதிங்க்" என்ற பெயரில் வெளியிடப்பட்ட கொள்கையின் கீழ் இந்த ஆய்வுகூடம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் 2027ம் ஆண்டு முதல் முற்றிலும் புதிய வகையிலான வாகன வடிவமைப்பை வெளியிட திட்டமிட்டுள்ளது.அதன் அடிப்படையில் தான் இந்த ஆய்வு கூடத்தை தற்போது திறந்துள்ளது. இது "மேக் இன் இந்தியா" திட்டத்தை மாற்றி "டிசைன் இன் இந்தியா" என்ற கொள்கையில் வாகனங்களை வடிவமைக்க உள்ளது. இந்தியாவிற்காக தயாரிக்கப்படும் வாகனங்களுக்கான வடிவமைப்பை இந்திய மக்களின் மனதை புரிந்து கொண்டு அவர்களது தேவைக்கு ஏற்ப வாகனங்களவ வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை டிசைன் பிரிவு அதிகாரி லாரன்ஸ் வேன் டென் அக்கர் என்பவர் கூறியுள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள ஆய்வு கூடத்தில் "டெக்டைல் கன்ஃப்ளூயன்ஸ்" என்ற டிசைன் மொழியை பின்பற்றி வாகனங்களை டிசைன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த டிசைன் மொழி ஐரோப்பிய கட்டுமானம் மற்றும் இந்திய கலாச்சாரத்தை கருத்தில் வைத்து வாகனங்களை வடிவமைக்கவுள்ளனர். இதற்காக சிறப்பு டூல்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி அடுத்த தலைமுறை விஷூவலைஷேசன் ஸ்டூடியோ பயன்படுத்தப்படும் இதில் சிறப்பான பிரன்டெஷன் செய்ய முடியும். அடுத்தாக விஆர் அடிப்படையிலான 3டி கான்செட் பார்க்கும் வசதி கொண்டு வரப்படுகிறது. இது போக 8.5 மீட்டர் 2.4 மீட்டர் நீளம் கொண்ட எல் இடி வால் அமைக்கப்படுகிறது. இதில் ஹைடெஃபெனிஷன் டிஸ்பிளே பொருத்தப்படும்.
WE/ME ஸோன்கள் அமைக்கப்பட்டுள்ளது இது கிரியேட்டிவான விஷயங்களை ஒன்று சேர்த்து வழக்கமான யோசனையை மாற்றியமைக்க உதவுகிறது. இது போக விர்ச்சுவல் ரியலிட்டி முறையில் லைஃப் சைஸில் வாகனத்தின் உட்புறத்தை காண முடியும் அளவிற்கு இது வடிவமைக்கப்படுகிறது. சென்னையில் உள்ள நிஸான் ஆலைக்க அருகிலேயே இந்த ஆய்வு கூடம் அமைக்கப்படுகிறது.

இந்த ஆய்வு கூடத்தில் டிசைன் முழுமையும் சென்னையிலேயே செய்யப்படுகிறது. முற்றிலுமாக இந்தியர்கள் தான் இதில் அதிகம் பணியாற்றவுள்ளனர். சென்னையில் சுமார் 10,000 பேருக்கு இதன் மூலம் நேரடியாக வேலை கிடைக்கவுள்ளது. இவர்கள் இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான புராஜெக்ட்களில் பணியாற்றவுள்ளனர். இந்தியாவில் வடிவமைக்கப்படும் பொருட்கள் சர்வசேத அளவில் இருக்கும்படி இவர்கள் தயாரிக்கவுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தனது ஆய்வுகூடத்தை அமைக்க திட்டமிடுவது இந்தியா ஆட்டோமொபைல் மார்கெட்டில் எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை காட்டுகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. நிச்சயம் இந்த தயாரிப்புகள் பெரிய வெற்றி பெரும். அதற்கு இந்திய இளைஞர்களின் உழைப்பு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









