ஒரே நேரத்தில் 7 பேர் போக கூடிய புதுமுக கார் இந்தியா வருவது உறுதியாகிருச்சு.. மாருதி, டாடாவுடையது அல்ல!..
7 பேர் போகின்ற மாதிரியான அதிக இருக்கைகளைக் கொண்ட புதுமுக காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை ஓர் கார் உற்பத்தி நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ரெனால்ட் (Renault), இதுவே அந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தன்னுடைய மூன்றாம் தலைமுறை 'டஸ்டர்' (Duster) கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட காரையே இந்தியாவில் புதிய பெயரில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றது. ரெனால்ட் போரியல் (Renault Boreal), எனும் பெயரிலேயே அது சந்தையைக் களம் காண இருக்கின்றது.
மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்ட ஓர் கார் மாடலே இது ஆகும். ஒரே நேரத்தில் இந்த வாகனத்தில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த காரை எப்போது ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் அது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், இந்த கார் மாடல் முதலில் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது. இதற்கு பின்னரே இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காரை அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய வாகனமாக ரெனால்ட் தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், தட்டையான அடிப் பகுதியைக் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் 10.1 அங்குல தொடு திரை சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுமட்டுமல்ல, 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆர்கேமிஸ் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த காரில் அது வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் லெவல் 2 வகை அடாஸ் அம்சத்தையும் இந்த காரில் ரெனால்ட் வழங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மட்டுமல்ல இந்த கார் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டதாகவும் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்தியாவில் அதிக இருக்கைகளை தாங்கிய கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இருக்கைகளில் மட்டுமல்ல, அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய காராகவும் போரியலை விற்பனைக்குக் கொண்டு வர ரெனால்ட் திட்டமிட்டு இருக்கின்றது. இதன் வருகை இப்போதே இந்தியர்கள் பலர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே எஸ்யூவி கார் மற்றும் 7 சீட்டர் என்கிற இரண்டு சிறப்புகளுடன் போரியல் எனும் பெயரில் இந்தியாவில் டஸ்டர் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


Click it and Unblock the Notifications









