ரேட் ரொம்ப கம்மி, நானோ கார் மாதிரி இவி காரை ரெடி செய்யும் ரெனால்ட்!
ரெனால்ட் நிறுவனம் வெளிநாட்டில் டேசிகா என்ற பிராண்டில் வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஐரோப்பிய மார்கெட்டில் முழு சைஸ் இவிகாரை குறைந்த விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான கான்செப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டேஸிகா நிறுவனம் ஹிப்ஸ்டர் என்ற காரின் கான்செப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த கார் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கியமாக இதன் அளவு, ஸ்டைல், மற்றும் இடவசதிக்காக பலர் இதை ஆச்சரியமாக பார்த்துவருகின்றனர். இதன் புரொடெக்ஷன் மாடல் காரை வாங்க பலர் தற்போதே தயாராகி வருகின்றனர்.

ஏற்கனவே இந்நிறுவனம் ஸ்பிரிங் என்ற குறைந்த விலை இவி காரை அந்தமார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.இந்நிலையில் இந்த ஹிப்ஸ்டர் கார் அதை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் வெறும் 3 மீட்டர் நீளம் கொண்டது தான். ஆனால் ஸ்பிரிங் கார் 3.7 மீட்டர் நீளம் கொண்டது.
இந்த கார் குட்டி காராக இருந்தாலும் 4 பேர் தாராளமாக அமர்ந்து கொள்ள முடியும். இது ஒரு ஸ்மார்ட் காராகவும் குறைந்த எடை கொண்டதாகவும் இருக்கும். தற்போது விற்பவனையாகும் எஸ்யூவி காரின் லுக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹிப்ஸ்டர் கார் 3000 மிமீ நீளம், 1550 மிமீ அகலம், 1530 மீமீ உயரம் கொண்டது.

இந்த காரில் சரக்கு வைக்க பூட் வசதி 70 லிட்டரிலும் பின்பக்க சீட்டை மடித்தால் அதை 500 லிட்டமாக மாற்றம் வசதி கொண்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தமே 800 கிலோ எடை கொண்டது தான். இந்த காரின் வடிவமைப்பு பாக்ஸி டிசைனில் உள்ளது. இது அந்நிறுவனத்தின் எக்கோ ஸ்மார்ட் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் ஹெட்லைட்டுகள் நீள வாக்கிலான ஹெட்லைட்டை கொண்டுள்ளது. பின்பக்க டெயில் லைட் 2 பாகமாக பிரிக்கப்பட்ட செட்டப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரீசைக்கிள்டு பாடி பேனல் மற்றும் சிங்கிள் பாடி கலரில் வடிமவைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குறைவான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. டோர் பகுதியில் ஹேண்டில்களுக்கு பதிலாக ஸ்டிராப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் உட்புறம் மினிமலான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்லைடிங் ஜன்னல், முன்பக்க பயணிகள் சீட்டிற்கு பெஞ்ச் சீட்டுகள், ஃப்யூச்சரிஸ்டிக்கான ஸ்டியரிங் வீல் உள்ளது. இந்த கார் சிறியதாக இருந்தாலும் பாதுகாப்பு விஷயத்தி்ல சிறப்பாக உள்ளது. இந்த காரில் 2 ஏர்பேக்குகள், பலமான சேஸிஸ், குழந்தைகள் சீட்டை பொருத்துவதற்காக சீட் மவுண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரில் இன்போடெயின்மென்ட் சீட் வழங்கப்படவில்லை. ப்ளூடூத் ஸ்பீக்கர் மட்டுமே உள்ளது. அதில் ஸ்மார்ட் போனை இணைத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த காரில் டிஜிட்டல் கீ, மல்டி மீடியா ஸ்டிரீன் ஆடியோ ஹப், போர்ட்டபிள் ஆடியோ ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த வாகனம் சிட்டி பயன்பாட்டிற்கும், தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்றது. இதன் பேட்டரி 20kWh இருக்கும் எனவும் இது முழு சார்ஜில் 150 பயணிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. தினசரி பயன்பாட்டில் வாரம் 2 முறை சார்ஜ் செய்யும் அளவிற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வாகனம் எப்பொழுது அறிமுகமாகும் என்ற தகவலை இதுவரை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை 2026-27ம் ஆண்டில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்த வாகனம் 13 ஆயிரம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் ரூ15.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









