வட்டியே இல்லாம மாதத்தவணை திட்டத்தில் பிராண்ட்-நியூ காரா? ரெனால்ட் குறி வெச்சிடுச்சு மிஸ் ஆகுமா!!

ரெனால்ட் (Renault), உலகளவில் பிரபலமான பிரெஞ்சு கார் நிறுவனம். ஐரோப்பாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இருந்தாலும், இந்திய சந்தையில் தனக்கான இடத்தை பிடிக்க போராடி வருகிறது. இருப்பினும், எளிதில் நம்பிக்கையை இழக்காமல் இருக்கும் ரெனால்ட் நிறுவனம், இந்தியாவில் 'டிஸ்கவரி டேஸ்' (Discovery Days) என்கிற பெயரில் ஒரு திட்டத்தை ஜூன் 6ஆம் தேதி முதல் செயல்படுத்த உள்ளது. இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, ரெனால்ட் கார்களுக்கு அசத்தலான சலுகைகள் நாடு முழுவதும் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

2025 ஜூன் 6ஆம் தேதி முதல் துவங்கும் ரெனால்ட்டின் டிஸ்கவரி டேஸ் திட்டம் வெறும் 11 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்க உள்ளது. அதாவது, ஜூன் 16ஆம் தேதி ரெனால்ட்டின் டிஸ்கவரி டேஸ் முடிவடைந்துவிடும். வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியாக ரெனால்ட் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த முயற்சியின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் கார்கள் அனைத்தும் சலுகைகள் உடன் கிடைக்கும்.

renault cars discovery days announced

ஆதலால், ரெனால்ட் காரை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த 11 நாட்கள் கார் வாங்குவதற்கு ஏற்ற நேரம் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் உள்ள ரெனால்ட் ஷோரூம்களில் சில விழாக்களும், கார் வாங்கும் கஸ்டமர்களுக்கு கார் டெலிவிரி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இவை ரெனால்ட் ஷோரூம்களில் எப்போதுமே நடத்தப்படக் கூடியவை தான். என்றாலும், இந்த 11 நாட்களுக்கு இவ்வாறான நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்தப்படும்.

அதுமட்டுமின்றி, ஷோரூமுக்கு வரும் கஸ்டமர்களை கவரும் விதமான டிசைன்களில் ஷோரூம்கள் அலங்கரிக்கப்பட உள்ளன. ஆட்டோமொபைல் வாகன ஆர்வலர்களில் இருந்து முதல்முறையாக கார் வாங்குபவர்கள் வரையில் அனைவரையும் கவரக்கூடிய வகையிலும், கஸ்டமர்கள் உடன் மேலும் நெருக்கமாகும் வகையிலும் ரெனால்ட் ஷோரூம்களில் ஓவியங்களில் இருந்து உள்கட்டமைப்பு வேலைகள் வரையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

renault cars discovery days announced

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ரெனால்ட் கார்களின் ஆர்.எக்ஸ்.டி (RXT), ஆர்.எக்ஸ்.டி+ (RXT+) மற்றும் ஆர்.எக்ஸ்.இசட் (RXZ) வேரியண்ட்களுக்கு அசத்தலான சலுகைகள் வழங்கப்பட உள்ளன. அவற்றுள் முக்கியமானது, ரெனால்ட் கார்கள் அனைத்திற்கும் 0 சதவீதம் வட்டி உடன் மாதத்தவணை திட்டங்கள் வழங்கப்பட உள்ளதாகும். இந்த நிதியுதவி சம்பந்தமான வேலைகளை நிஸான் ரெனால்ட் ஃபைனான்சியல் சர்வீஸஸ் (NRFSI) கவனித்துக் கொள்ளும்.

நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த நிதிசேவை நிறுவனத்திற்கான கட்டணமும் 50% அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய காரை கொடுத்து புதிய ரெனால்ட் காரை வாங்குபவர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் (Exchange) சலுகையாக ரூ.40,000 வரையில் வழங்கப்பட உள்ளது. இவை இல்லாமல், ஏற்கனவே ரெனால்ட் காரை பயன்படுத்தி வருபவர்கள் அதனை கொடுத்து புதிய ஒன்றை வாங்கும்போது அவர்களுக்கென பிரத்யேகமான லாயலிட்டி சலுகைகள் கிடைக்கும்.

இந்தியாவில் தற்போதைக்கு க்விட் (Kwid), டிரைபர் (Triber) மற்றும் கைகர் (Kiger) என்கிற மூன்று ரெனால்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இவை மூன்றும் ஒவ்வொரு விதமான கார்கள் ஆகும். அதாவது, க்விட் ஆனது ரெனால்ட்டின் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். அதுவே, டிரைபர் ஆனது எம்பிவி ரக கார் மற்றும் கைகர் ஆனது எஸ்யூவி ரக கார் ஆகும். இவை மூன்றுமே விலை குறைவான கார்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரெனால்ட் கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைக்கு மூன்றே மூன்று ரெனால்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதில் இருந்து அதனை அறியலாம். இந்த நிலையை மாற்றும் முயற்சியாகவே ரெனால்ட் நிறுவனம் புதியதாக டிஸ்கவரி டேஸ் என்கிற திட்டத்தை குறுகிய காலத்திற்கு செயல்படுத்த உள்ளது. இந்த செயல்திட்டம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 5, 2025, 5:00 [IST]
English summary
Renault discovery days from june 6 to 16 check all details here
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+