இன்னும் 2 மாசம் தான்! புதிய அவதாரம் எடுக்கும் டஸ்டர் காரில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டஸ்டர் காரை வரும் ஜனவரி 26ம் தேதி விற்பனைக்காக அறிமுகப்படுத்தவுள்ளது.இந்த காரை தொடர்ந்து இதன் 7 சீட்டர் காரும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட எதிர்பார்ப்பிற்கிடையில் டஸ்டர் கார் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த கார் அறிமுகமாக 2 மாதமே இருப்பதால் இது குறித்து இதுவரை நமக்கு கிடைத்துள்ள தகவல்களை காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் டஸ்டர் காரை ஏற்கனவே அறிமுகப்படுத்தி அது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்த நிலையில் இ்நத காரின் விற்பனையை நிறுத்தியது. மீண்டும்இந்த கார் வரும் வரும் என நீண்ட காலமாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த காரின் வருகை உறுதியாகியுள்ளது. ரெவனால் நிறுவனமே அடுத்த மிட் சைஸ் எஸ்யூவி கார் டஸ்டர் காராக இருக்கும் எனவும் இது ஜனவரி 26ம் தேதி பொது வெளியில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது மட்டுமல்லாமல் ரெனால்ட் நிறுவனம் 2027ம் ஆண்டிற்குள் புதிய 7 சீட்டர் கார் ஒன்றையும் அறிமகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இது போக குறைந்த பட்ஜெட்டிலான எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முதல் காராக டஸ்டர் கார் அறிமுகம் இருக்கிறது.
இந்த டஸ்டர் கார் கடந்த 2012ம் ஆண்டே தனது முதல் தலைமுறை காராக அறிமுகமானது. இது பிராக்கடிக்கல் அம்சங்களுடன் சப் செக்மெண்டில் சிறப்பாக காராக வடிவமைத்துள்ளது. இந்த கார் விற்பனையில் இருந்த நின்ற பிறகு இந்த செக்மெண்ட் மிகப்பெரிய அளவில்இந்தியாவில் வளர்ச்சியடைந்த்துள்ளுது. மாருதி, மஹிந்திரா, கியா, டொயோட்டா, டாடா, ஹோண்டா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் எம்ஜி போன்ற நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் ஏகப்பட்ட கார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த செக்மெண்டில் விற்பவனையாகும் கார்களில் எண்ணிக்கை இந்தியாவில் ஒட்டு மொத்தமாக விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கையில் 25 சதவீதமாவது இருக்கிறது. இதனால் இந்த செக்மெண்ட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது. டஸ்டர் கார் விற்பனையில் தொடர்ந்து இருந்திருந்தால் நல்ல விற்பனையை பெற்றிருக்கிரக்கும்.
இந்த கார் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் போது மட்டுமே 2 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியிருந்தது. சர்வதேச அளவில் 18 லட்சம் கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்நிலையில் இதன் புதிய வெர்ஷவன் தற்போது தயாராகி வருகிறது. இந்த புதிய டஸ்டர் காரை ரெனால்ட் நிறுவனம் சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள தனது ஆலையில் வைத்து தான் தயாரிக்கிறது. இ்நத கார் சிஎம்எஃப்-பி பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது.

இந்த காரில் சில புதிய அம்சங்கள் வரப்போகிறது. உள்ளே சென்டர் கன்சோல் சற்று உயரமாக இருக்கும் வகையிலும், ஆட்டோமெட்டிக் வேரியின்ட்களுக்கு கியர் செலக்டர் எலெட்ரானிக் செலக்டர்களாகவும் வரப்போகிறது. இந்த காரின் உள்ளே 10.1 இன்ச் ஓப்பன் ஆர் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியுடன் இருக்கிறது. இது போக 7 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளுது.
மேலும் இந்த காரில் வயர்லெஸ் சார்ஜிங், லெதர் கவர் செய்யப்பட்ட ஸ்டியரிங் வீல், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், டைப் சி சார்ஜிங் போர்ட்கள், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், லெவல்2 அடாஸ், லேன் கீப் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஆகிய அம்சங்கள் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டஸ்டர் காருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த காரின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள். இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நிச்சயம் விற்பனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். இந்த காரின் வருகை நிச்சயம் போட்டியாளர்களின் விற்பனையை பாதிக்கும்.


Click it and Unblock the Notifications









