மாருதிய ஒழிச்சு கட்டியே ஆகணும்னு பிரான்ஸ்காரன் வெறியோட இருக்கான்! அதுக்குதான் இவ்ளோ கம்மி விலையில் புது கார்!
இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வந்த ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரின் விற்பனை கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தையில் மீண்டும் 'கம்பேக்' கொடுக்கவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று (Republic Day) பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் புதிய டீசர் வீடியோ (Teaser Video) ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் வீடியோ, சமூக வலை தளங்களில், மிகவும் வேகமாக பரவி வருகிறது.

சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காருடன் ஒப்பிடும்போது, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மாடலின் டிசைனில் (Design) நிறைய மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசர் வீடியோ மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
அதாவது இந்த டீசர் வீடியோவை உற்று நோக்கினால், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் முன் பகுதியில், கண் புருவத்தின் வடிவில் எல்இடி பகல் நேர விளக்குகள் வழங்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம். இதுதான் டர்ன் இன்டிகேட்டர்களாகவும் செயல்படும். ஆனால் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் இது 'Y' வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் பின் பகுதியில், கனெக்டட் எல்இடி டெயில்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது மாடர்ன் எஸ்யூவி கார்களில் தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் ஒரு அம்சம் ஆகும். ஆனால் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள ரெனால்ட் டஸ்டர் காரில், டெயில்லைட்கள் இப்படி இருக்காது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் இந்திய சந்தைக்கான புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளை (Features) எல்லாம் எதிர்பார்க்கலாம்.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உடன் 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடம் கழித்து, 1.6 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
அத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), டாடா சியரா (Tata Sierra), கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுக்கும், பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் கார், விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








