நாடே எதிர்பார்த்த கார் மீண்டும் வருகிறது! இந்த 5 விஷயத்தை மிஸ் பண்ணாதீங்க!
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் சிறப்பாக விற்பனையாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் இந்த கார் பிரபலமானது. இந்நிலையில் இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டதிலிருந்தே இதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு இருந்தது. இந்நிலையில் ரெனால்ட் நிறுவமன் வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி இந்த காரை மீண்டும் இந்திய மார்கெட்டிற்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த காரில் உள்ள டாப் 5 தகவல்களை காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் டஸ்டர் கார் இந்தியாவில் எஸ்யூவி கார்கள் மீது மக்கள் அதிகம் மோகம் கொள்ள முக்கியமான காரணமாக அமைந்தகார் இது. பலர் இந்த கார் வந்த பிறகு மார்கெட்டில் பெரும் புரட்சி செய்யும் அளவிற்கு வாங்கினார்கள். ஆனால் இந்த கார் அப்டேட் செய்யப்படாமல் விற்பனை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த கார் வரும் நிலையில் மாருதி விக்டோரிஸ், கிராண்ட் விட்டாரா, டாடா சியாரா, டாடா கர்வ், ஹோண்டா எலவேட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.

டிசைன் மொழி
புதிய ரெனால்ட் டஸ்டர் காரில் புதிய டிசைன் மொழி கையாளப்பட்டுள்ளது. பழைய டஸ்டர் காரின் மொழியில் இது வடிவமைக்கப்படவில்லை. பழைய காரை விட சற்று அகலமாக பெரியதாக இருக்கம் வகையில் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக எல்இடி டிஆர்எல், புரொஜெக்டர் ஹெட்லைட், முன்பக்கம் புதிய வடிவமைப்பு, புதிய அலாய் வீல்கள், பாடி கிளாடிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இன்ஜின் ஆப்ஷன்
ரெனால்ட் நிறுவனம் சர்வதேச மார்கெட்டில் 1.3 லி மற்றும் 1.6லி ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட ஆப்ஷனவ்களை வழங்குகிறது. மேலும் இந்த காரில் 1.0 லி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இதுபோக இந்தியாவில் இந்த கார் களம் இறங்கும் போது 1.3லி மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

கேபின்
ரெனால்ட் டஸ்டர் காரில் கேபில் பல்வேறு அம்சங்கள் இடம் பெரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, கனெக்டெட் தொழிற்நுட்பங்கள், அடாஸ் தொழிற்நுட்பம், மல்டிபிள் ஏர்பேக், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
புதிய பிளாட்ஃபார்ம்
ரெனால்ட் நிறுவனம் இந்த புதிய டஸ்டர்க காரை சிஎம்எஃப் - பி பிளாட்ஃபார்மில் உருவாக்குகிறது. இதன் ஃபிளாட்பார்மில்தான் நவீன கார்களை அந்நிறுவனம் தயாரிக்கிறது. இதன் டிசைன், சிறப்பானபாதுகாப்பு, ஃபிளக்ஸிபிளிட்டி, பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களுடன்வடிவமைக்க ஏற்ற கார் ஆகும். தரம் குறையாமல் அதே நேரம் குறைந்த செலவில் இந்த பிளாட்ஃபார்மில் வாகனங்களை தயாரிக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டஸ்டர் கார் நிறுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் எஸ்யூவி மார்கெட் மிக வேகமாக வளர்ந்துவிட்டது. பல்வேற விதமான தயாரிப்புகள் வந்துவிட்டன. இந்நிலையில் இந்தகார் தற்போது மீண்டும் வரும்போது மிகப்பெரிய போட்டியை எதிர்கொள்ள வேண்டியதுவரும். இதையும் தாண்டி இந்த கார் வெற்றி பெருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









