ஒரே சார்ஜ்ல 1008 கி.மீ போன கார்! அதுவும் சாதாரண பேட்டரி சாத்தியமாகியிருக்குது!

ரெனால்ட் நிறுவனத்தின் ஃபிலென்ட் என்ற 2025ம் ஆண்டு டெமோ கார் ஒரே சார்ஜில் 1008 கி.மீ பயணித்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இவ்வளவு அதிக ரேஞ்ச் கிடைக்க பேட்டரி திறன் மற்றும் வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பு முக்கியமான காரணமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரெனால்ட் நிறவனம் எவ்வளவு தூரம் சிறப்பாக செயல்படும் என்பதை எடுத்துக்காட்ட ஒரு ஏற்பாட்டை செய்திருந்தது. இதற்காக ஃபிலன்டே என்ற டெமோ காரை உருவாக்கியிருந்தது. இந்த காரை வடிவமைக்கும் பேதோ குறைவான பேட்டரிதிறனை கொண்டு செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நீண்ட தூர ஹைவேயில் பயன்படுத்த ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Renault Filante

இந்த சோதனை கடந்த 18ம் தேதி மொராக்கோவில் உள்ள யூடிஏசி சோதனை டிராக்கில் வைத்து நடந்தது. இந்த சோதனையில் ஒரு லேப் பில் ஒரே இடத்தில் காரை சுமார் 102 கி.மீ வேகத்தில் ஓட விட்டனர் சுமார் 9 மணி நேரம் 52 நிமிடத்தில் இது முழுவதுமாக பேட்டரி காலியானது. இதில் 1008 கி.மீ ஓடியிருந்தது.

இந்த காரில் 87KWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஓடும் போது 100 கி.மீ பயணிக்க 7.8kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டது. 1000கி.மீ ஓடிய பின்பும்பேட்டரி முழுமையாக காலியாகவில்லை. 11 சதவீத பேட்டரி மிச்சம் இருந்தது. அப்படி பார்த்தால் 100 கி.மீ வேகத்தில் பயணித்தால் இன்னும் 120 கி.மீ பயணித்திருக்க முடியும்.

வழக்கமாக அதிக ரேஞ்ச் தர பெரிய பேட்டரியை பயன்படுத்துவார்கள். ஆனால் ர ரொன்ல்ட் நிறுவனம் மாறாக பேட்டரியிலிருந்து தேவையில்லாமல் போகும் சார்ஜை குறைந்தனர். இந்த கார் வெறும் 1000 கிலோ எடை கொண்டது தான். பெரும்பாலும் கார்பன் பைஃபர் மற்றும் குறைந்த எடை கொண்ட அலுமினியம் பாகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பல பாகங்கள் 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் வாகனத்தின் வடிவமைப்பின் ஏரோ டைனமிக்ஸ் முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த காரின் டிராக் கோஎஃபினியன்டை 0.40ல் இருந்து 0.30 ஆகு குறைந்தது. இந்த கார் வேகமாக செல்லும் போதும் குறைவான காற்றை மட்டுமே காரின் உள்ளே விடும். இதனால் குறைவான ஏர் டிராக் மட்டுமே இருக்கும்.

மேலும் இந்த காரில் ஸ்டீர் பை ஒயர், பிரேக் பை ஒயர் ஆகிய தொழிற்நுட்பங்கள் உள்ளன. வழக்கமான மெக்கானிக்கல் லிங்கேஜ் சிஸ்டம் இதில்இல்லை. மேலும் இதில் பொருத்தப்பட்ட டயர் குறைந்த ரோலிங் ரெஸிஸ்டென்ஸ் உடன் கூடிய டயர்களாக பொருத்தப்பட்டுள்ளன.மேலும் இந்த காரில் ஸ்டீர் பை ஒயர், பிரேக் பை ஒயர் ஆகிய தொழிற்நுட்பங்கள் உள்ளன. வழக்கமான மெக்கானிக்கல் லிங்கேஜ் சிஸ்டம் இதில்இல்லை. மேலும் இதில் பொருத்தப்பட்ட டயர் குறைந்த ரோலிங் ரெஸிஸ்டென்ஸ் உடன் கூடிய டயர்களாக பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் தனது காரை அதிக ரேஞ்ச் தரும் காராக தயாரித்துள்ளது. இந்த கார் நிச்சயம் விற்பனைக்கு வராது. இது சோதனைக்காக செய்யப்பட்டது. தான். இந்த தொழிற்நுட்பத்தை ஆய்வு செய்து இதை பிராக்கடிக்கலாக எப்படி சாத்தியப்படுத்தலாம் என யோசிப்பார்கள் இது நிச்சயம் பலனுள்ளதாக இருக்கும் என நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 30, 2025, 18:40 [IST]
English summary
Renault filante 2025 ev efficiency record 1008km
மேலும்... #renault #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+