3 ஆண்டுகள், 1 லட்சம் கிமீ வாரண்டியை நிரந்தரமாக்கிய பிரபல கார் நிறுவனம்.. எல்லாரும் நம்பிக்கையோட வாங்க போறாங்க!

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவரும் விதமாக தன்னுடைய தயாரிப்புகளுக்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வாரண்டி திட்டத்தை வழங்க தொடங்கி உள்ளது. அதாவது, கார் வாங்குவோர் அனைவருக்கும் இந்த அதிக ஆண்டுகள் அல்லது கிமீ வாரண்டி திட்டத்தை ஸ்டாண்டர்டாக அது வழங்க ஆரம்பித்துள்ளது. இதன் வாயிலாக கூடுதல் கட்டணமின்றி இந்த திட்டத்தை கார் உற்பத்தியாளர் வழங்க முன் வந்து இருக்கின்றார் என்பது தெரிய வந்து இருக்கின்றது.

ஆகையால், இதற்காக எந்த ஒரு கூடுதல் கட்டணத்தையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டாம். தன்னுடைய தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டே இந்த அளவு நீண்ட கால வாரண்டி திட்டத்தை நிரந்தரமானதாக மாற்றி இருக்கின்றனர். இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது வேறு யாருமல்ல, ரெனால்ட் (Renault) நிறுவனமே அதுவாகும்.

Renault triber side view

நேற்று (1 ஜனவரி 2025) முதல் நிறுவனத்தின் கார்களை வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வாரண்டி திட்டம் கிடைக்கும். இப்போதைய நிலவரப்படி ரெனால்ட் நிறுவனத்தின்கீழ் க்விட் (Kwid), கைகர் (Kiger) மற்றும் ட்ரைபர் (Triber) ஆகிய கார் மூன்று மாடல்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இதில் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக கைகர் எஸ்யூவி இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான எஸ்யூவி ரக கார் மாடல் இதுவாகும். இந்த கார் மாடல் உட்பட அனைத்து மூன்று கார் மாடல்களுக்கும் இந்த அதிக கால வாரண்டி திட்டம் பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுமட்டுமில்லைங்க, இன்னும் பல வாரண்டி பேக்கேஜ்-களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக நிஸான் நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. அந்தவகையில், 4 நான்கு ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ, ஐந்து ஆண்டுகள் அல்லது 1.20 லட்சம் கிமீ மற்றும் 6 ஆண்டுகள் அல்லது 1.40 லட்சம் கிமீ ஆகிய கூடுதல் வாரண்டி திட்டங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக நிஸான் அறிவித்திருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, ஏழு ஆண்டுகள் அல்லது எல்லையில்லா கிமீ வாரண்டி திட்டத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக ரெனால்ட் தெரிவித்து இருக்கின்றது. ஆனால், இந்த அதிக கால வாரண்டி திட்டங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கூடுதல் நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களை 'ரெனால்ட் செக்யூர்' (Renault Secure) எனும் ஸ்கீமின்கீழே நிஸான் வழங்குகின்றது.

தொந்தரவு இல்லா பயன்பாட்டை தன்னுடைய வாடிக்கையாளர்கள் பெற வேண்டும் என்கிற முக்கிய நோக்கத்தின் காரணமாகவே இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களை ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இது நிஸான் கார் காதலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. எனவே கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த 2025 ஆம் ஆண்டில் விற்பனையில் புதிய வளர்ச்சியை அது காணும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிஸான் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கவே புதிய கூட்டப்பட்ட வாரண்டி திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே இது நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது. குறிப்பாக, நிஸான் நிறுவனத்தின் கார்கள் மீது அதீத நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுக்க இந்த திட்டம் உறுதுணையாக இருக்கப் போகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீப காலமாக வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டும், குறிப்பாக, நம்பிக்கை விதைக்கும் பொருட்டும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தை இலவசமாக வழங்கி வருகின்றனர். அந்தவகையிலேயே, நிஸானும் கவர்ச்சியான நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 2, 2025, 16:27 [IST]
English summary
Renault india introduces three year warranty plan standard for new cars from 1 january 2025
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+