காரின் விலை என்னமோ 5 லட்ச ரூபாய் தான்... ஆனா 500 பேருக்கு மட்டுமே வாங்கும் வாய்ப்பு!
ரெனால்ட் இந்தியா (Renault India) நிறுவனம், இந்திய வாகனச் சந்தையில் தனது க்விட் (KWID) காரின் பத்தாண்டு காலப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக, 10ஆம் ஆண்டுவிழா சிறப்புப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய க்விட் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ரெனால்ட் க்விட் ஒரு ஐகானிக் கார் மட்டுமல்லாமல், அதன் தனித்துவமான வடிவமைப்பு, எஸ்யூவி (SUV) போன்ற தோற்றம் மற்றும் மலிவு விலையின் காரணமாக இந்தியாவின் எண்ட்ரி-லெவல் கார் பிரிவை மாற்றியமைத்த பெருமையைப் கொண்டுள்ளது. மார்க்கெட்டில் இத்தகைய காரின் விற்பனையில் 10 ஆண்டுகளை கடந்துள்ளதை கொண்டாடும் விதமாகவே புதிய ஸ்பெஷல் எடிசனை ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த 10ஆம் ஆண்டுவிழா சிறப்புப் பதிப்பானது, டெக்னோ வேரியண்ட்டில் 500 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். இதன் வெளிப்புறத் தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் பிரத்யேக ஸ்டைலிங் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சிறப்புப் பதிப்பின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.5.14 லட்சம் ஆக நிர்ணயிக்கபட்டு உள்ளது.
அதேநேரம், ஏஎம்டி (AMT) வேரியண்ட்டின் விலை ரூ.5.63 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய 10ஆம் ஆண்டு நிறைவு க்விட் கார் ஆனது, ஃபயரி ரெட் (Fiery Red) உடன் கருப்பு ரூஃப் (Black Roof) மற்றும் புதிய ஷேடோ கிரே (Shadow Grey) உடன் கருப்பு ரூஃப் (Black Roof) ஆகிய இரு கவர்ச்சிகரமான டூயல்-டோன் வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பளபளப்பான கருப்பு ஃப்ளெக்ஸ் சக்கரங்கள், கதவுகள் மற்றும் C-பில்லரில் உள்ள தனித்துவமான ஆண்டுவிழா ஸ்டிக்கர்கள் ஆகியவை இதன் கவர்ச்சியை அதிகரிக்கின்றன. காரின் முன்பக்க கிரில் பகுதியில் மஞ்சள் நிறத்திலான இன்செர்ட், இந்த லிமிடெட் பதிப்பின் அடையாளமாக விளங்குகிறது. டூயல்-டோன் கலர் ஆப்ஷனுடன் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான டூயல்-டோன் கார் என்ற பெருமையை ரெனால்ட் க்விட் பெற்றுள்ளது.
காரின் உட்புறத்தில், 10ஆம் ஆண்டுவிழா தீம் கொண்ட இருக்கை வடிவமைப்புகள் மற்றும் பிரீமியம் தரத்திலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இருக்கைகள், லெதரெட் ஸ்டீயரிங் வீல், இன்ஃபோடெயின்மென்ட் சரவுண்ட் சிஸ்டம் மற்றும் டோர் ட்ரிம்களில் உள்ள மஞ்சள் நிற அசென்ட்கள் காருக்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கின்றன.

ஒளிரும் ஸ்கஃப் பிளேட்கள் மற்றும் ரியர் வியூ மிரர்களில் கொடுக்கப்பட்டுள்ள பட்டில் விளக்குகள் இந்த சிறப்புப் பதிப்பின் கொண்டாட்ட உணர்வை எடுத்துக்காட்டுகின்றன. க்விட் காரின் இந்த பத்தாண்டு கால கொண்டாட்டம், 10ஆம் ஆண்டுவிழா பதிப்புடன் மட்டும் நின்றுவிடவில்லை. அனைத்து வேரியண்ட்டுகளிலும் இனி அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் கிடைக்கும்.
மேலும், க்விட் காரின் க்ளைம்பர் (Climber) வேரியண்ட் 6 ஏர்பேக்குகளுடன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது. இவற்றுடன் ரெனால்ட் இந்தியா நிறுவனம் க்விட் காரின் வேரியண்ட்களின் பெயர்களையும் மாற்றியுள்ளது. அதன்படி, எவல்யூஷன் (Evolution) (முன்னர் RXL), டெக்னோ (Techno) (முன்னர் RXT) மற்றும் க்ளைம்பர் (Climber) ஆகியவை க்விட் காரின் வேரியண்ட்களாக உள்ளன.

ரெனால்ட் க்விட் காரின் துவக்க எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.4.29 லட்சம் ஆக உள்ளது. அதேநேரம், க்விட் ஏஎம்டி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.99 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இது இந்தியாவின் மிக மலிவு விலையிலான ஆட்டோமேட்டிக் கியர்ஷிஃப்ட் கொண்ட கார்களில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக விளங்குவதினாலேயே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் க்விட் கார் இந்திய மார்க்கெட்டில் கடந்த 10 வருடங்களில் பலரது முதல் காராக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க காரின் 10 வருடங்களை கொண்டாடும் வகையில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது சிறந்த முடிவே ஆகும். ஏனெனில், இந்த அறிமுகம் க்விட் கார்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









