எல்லா ஊரு மக்களும் நம்ம ஊரை தேடி வர போறாங்க.. சென்னை அம்பத்தூருல அப்படி ஒரு கார் ஷோரூமை திறந்திருக்காங்க..
ரெனால்ட் (Renault) நிறுவனம் மிகவும் தனித்துவமான கார் ஷோரூமை சென்னை அம்பத்தூரில் திறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தனித்துவமான கார் ஷோரூமிற்கு அது 'ஆர் ஸ்டோர்' (R Store) என்கிற பெயரைச் சூட்டி இருக்கின்றது. பிரீமியத்தை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த தரமான ஷோரூமை அது திறந்திருக்கின்றது. வேறு எந்த கார் ஷோரூமையும் இந்த அளவிற்கு பிரீமியமாக பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, நாட்டில் வேறு எங்குமே இந்த மாதிரியான ஷோரூமை அது திறக்கவில்லை.
ஆகையால், மற்ற ஊரு மக்களையும் இந்த ஷோரூம் கவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது தன்னுடைய கார்களை போல ஷோரூமையும் அது அழகுப்படுத்தி இருக்கின்றது. ஷோரூமின் இன்டீரியர் பசுமையாகவும், வண்ண விளக்கு அலங்காரங்களைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. விரைவில் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் சில புதுமுக கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

அந்தவகையில், விரைவில் நிறுவனம் புதிய டஸ்டர் (Duster) கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் வர இருப்பதை முன்னிட்டே தன்னுடைய சென்னை விற்பனையகத்தை ரெனால்ட் நிறுவனம் மாற்றியமைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
எதுவாக இருந்தாலும் நிறுவனம் இந்த செயல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. நிறுவனம் இந்த ஷோரூமை மாற்றியமைத்தது மட்டுமல்ல தன்னுடைய லோகோக்களையும் சீர்படுத்தி இருக்கின்றது. புதிய லோகோ, கருப்பு நிற பின்புலத்தைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. எனவே ஷோரூம் வாயிலாக மட்டுமல்ல கார்கள் வாயிலாகவும் ஓர் தனித்துவமான புதிய அனுபவத்தை வழங்கும் முயற்சியில் ரெனால்ட் களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மேலும், தன்னுடைய புதிய ஷோரூம்களை அது ஆர் ஸ்டோர் எனும் பெயரிலேயே திறக்க திட்டமிட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஷோரூம்களின் பெயரையும், அதன் தோற்றத்தையும் அது விரைவிலேயே மாற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த ஆண்டு முடிவிற்குள் சுமார் 100க்கும் அதிகமான ஷோரூம்களை அது மாற்றியமைக்க திட்டமிட்டு இருக்கின்றது.
இதேபோல், புதிய சின்னம் வரவிருக்கும் டஸ்டர் காரிலும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், ரெனால்ட் நிறுவனம் இந்த கார் மாடலை மட்டும் இல்லைங்க இந்த 2025 ஆம் ஆண்டில் இன்னும் இரண்டு கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.

அந்தவகையில், புதுப்பிக்கப்பட்ட ட்ரைபர் (Facelift Triber) மற்றும் விலை குறைவான மற்றும் ஓர் புதுமுக எம்பிவி (MPV) காரையும் அது நாட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், ரெனால்ட் கார் பிரியர்களுக்கு இந்த ஆண்டில் மிகப் பெரிய விருந்து காத்திருக்கின்றது என்றே கூறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறிப்பாக ரெனால்ட் டஸ்டர் காருக்கு இப்போது எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. உலக சந்தையில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலும் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப அதிக பிரீமியம் அம்சங்கள் மற்றும் புதிய அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்களுடன் டஸ்டர் எஸ்யூவி கார் நாட்டில் விற்பனைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications









