அடி மாட்டு விலையில் விற்கப்படும் எஸ்யூவி ரக கார்! கூடிய சீக்கிரமே டாடா, மாருதிக்கு செக் வைக்க போறாங்க!

இந்திய சந்தையில் மிக குறைவான விலையில் கிடைக்கும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ரெனால்ட் கைகர் (Renault Kiger). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அதாவது இதன் நீளம் 4 மீட்டருக்கும் குறைவாக இருக்கும். எனவே இதன் விலையை ரெனால்ட் நிறுவனத்தால் மிகவும் குறைவாக நிர்ணயம் செய்ய முடிந்துள்ளது.

இருப்பினும் ரெனால்ட் கைகர் காரின் விற்பனை எண்ணிக்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. சமீப காலமாக ஒரு மாதத்திற்கு ஆயிரம் யூனிட்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை கூட நெருங்க முடியாமல் ரெனால்ட் கைகர் சந்தையில் தத்தளித்து கொண்டுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

Renault Kiger

நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 606 கைகர் கார்களை மட்டுமே ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,059 ஆக இருந்தது. இது 43 சதவீத வீழ்ச்சி ஆகும்.

கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போதுதான் வீழ்ச்சி என்றால், நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டாலும், ரெனால்ட் கைகர் சரிவையே சந்தித்துள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 762 கைகர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதுவே குறைவான எண்ணிக்கைதான்.

Tata Nexon

அப்படி இருக்கும்போது, அதன் பின் வந்த ஏப்ரல் மாதம், இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 606 ஆக சரிவடைந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால் 20.47 சதவீத வீழ்ச்சியை ரெனால்ட் கைகர் சந்தித்துள்ளது. இத்தனைக்கும் ரெனால்ட் கைகர் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்று.

தற்போதைய நிலையில் ரெனால்ட் கைகர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வெறும் 6.15 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே உங்களால் வாங்கி விட முடியும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.23 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.

Maruti Suzuki Brezza

ரெனால்ட் கைகர் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் எக்ஸ்-ட்ரானிக் சிவிடி என 3 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களுக்கு எல்லாம் ரெனால்ட் கைகர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்.

அத்துடன் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) காருடனும், ரெனால்ட் கைகர் போட்டியிட்டு வருகிறது. விற்பனை மந்தமாக இருப்பதால், வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் (2025 Renault Kiger Facelift) மாடலை, ரெனால்ட் நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் களமிறக்கவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிய வசதிகள் வழங்கப்படவிருப்பது உள்ளிட்ட காரணங்களால், இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே புதிய மாடலின் வருகைக்கு பின்னர், ரெனால்ட் கைகர் காரின் விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போட்டி நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 22, 2025, 23:43 [IST]
English summary
Renault kiger compact suv sales report april 2025 43 per cent down facelift india launch soon
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X