இப்பவே விலை இவ்ளோதானா! அப்ப ஜிஎஸ்டி குறைஞ்சதுக்கு அப்புறம் தரமட்டத்துக்கு போயிரும்! மாருதி, டாடாவுக்கு போட்டி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் கைகர். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல், கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த புதிய மாடலின் டெலிவரி பணிகள் இந்தியா முழுக்க தொடங்கப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இது ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க்-ஆக உள்ளது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 100 ஹெச்பி பவர் மற்றும் 160 என்எம் டார்க் ஆக உள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வசதிகளை பொறுத்தவரையில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் கூடிய 8.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதுதவிர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வசதியும், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், லெதரேட் இருக்கைகள், மல்டி வியூ கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் 3டி ஆர்கமஸ் சர்ரவுண்ட் சவுண்ட் உடன் 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகளையும், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் மற்றும் 3 பாயிண்ட் சீட்பெல்ட்கள் போன்ற வசதிகளை எல்லாம், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
தற்போதைய நிலையில் 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 6.29 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.26 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆனால் 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இதை விட குறைவான விலையில் உங்களால் வாங்க முடியும்.
இந்தியாவில் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைகிறது. தற்போதைய நிலையில் 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு, 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் வரும் செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து, இந்த ஜிஎஸ்டி வரி வெறும் 18 சதவீதமாக குறையவுள்ளது. எனவே 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, இன்னும் குறைவான விலையில் உங்களால் வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, ஸ்கோடா கைலக் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் கருதப்படுகிறது.
அத்துடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர், டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய கார்களுக்கும் கூட, 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்தான். மிகவும் குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








