மாருதி, டாடாவுக்கு செக்! அடிமாட்டு விலையில் களமிறங்கிய புது கார்! மொத்த மார்க்கெட்டையும் மிரள விட போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் (2025 Renault Kiger Facelift), ஆகஸ்ட் 24ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 6.29 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று என்ற பெருமையை 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் தக்க வைத்துள்ளது.

Renault Kiger Facelift Side Design

2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிட்டத்தட்ட இந்த விலையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படியே மிகவும் குறைவான விலையில் 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்டின் விலை 11.29 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைதான்.

2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் பகுதியில் கம்பீரமான க்ரில் அமைப்பு, ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில்லேம்ப்கள், பனி விளக்குகள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

Renault Kiger Facelift

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கூல்டு க்ளவ் பாக்ஸ், யூஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட்கள், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் போன்றவை எல்லாம், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

அத்துடன் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதி உடன் கூடிய இருக்கைகள் மற்றும் மல்டி வியூ கேமரா சிஸ்டம் போன்ற வசதிகளையும், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் கொண்டுள்ளது. ஆனால் வேரியண்ட்களை பொறுத்து, 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வசதிகளின் பட்டியல் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இருப்பினும் 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 21 பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வழங்கப்படுகின்றன. இந்த 21 பாதுகாப்பு வசதிகளும், அனைத்து வேரியண்ட்களிலும் இருக்கும். இதில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், டிராக்ஸன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்றவை முக்கியமானவை ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இதன் பவர் அவுட்புட் 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறன் ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்த இன்ஜின் ஆப்ஷனின் மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு 19.83 கிலோ மீட்டர்கள் ஆகும்.

2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். இதன் பவர் அவுட்புட் 100 பிஎஸ் பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறன் ஆக உள்ளது. அதே நேரத்தில் இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 20.38 கிலோ மீட்டர்கள் ஆகும். இவை அனைத்துமே ரெனால்ட் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது குறிப்பிடத்தக்கது.

கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 24, 2025, 18:15 [IST]
English summary
Renault kiger facelift launched in india price features engine options all details
மேலும்... #renault #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+