அதுக்குனு இவ்ளோ கம்மியா! மாருதி, டாடாவை கதற விட போகும் புது கார்! வர்ற 24ம் தேதி களத்துல இறங்குது!
இந்திய சந்தையில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உருவாகியுள்ளது. சந்தையில் மிகப்பெரிய அளவிலான 'டிமாண்ட்' உள்ளதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எஸ்யூவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.
ஆனால் எஸ்யூவி ரக கார்களின் விலை சற்று அதிகம். இருப்பினும் ஒரு சில எஸ்யூவி ரக கார்கள் மிகவும் குறைவான விலையில் கிடைத்து கொண்டுதான் உள்ளன. அப்படி இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றுதான் ரெனால்ட் கைகர் (Renault Kiger).

இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ரெனால்ட் நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதன் அறிமுக தேதி (Launch Date) வெளியாகியுள்ளது.
ஆட்டோகார் இந்தியா தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி (August 24) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை (2025 Renault Triber Facelift), ரெனால்ட் நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதை தொடர்ந்து, 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டைமண்ட் லோகோ வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய பனி விளக்குகள், புதிய பம்பர்கள், புதிய ஹெட்லேம்ப்கள் ஆகிய அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.
அத்துடன் புதிய கலர் ஆப்ஷன்களும் (Colour Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை எல்லாம் தவிர, 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ள அதே டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட வசதிகளையும் (Features) 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நாம் எதிர்பார்க்கலாம்.
டிசைனில் (Design) மாற்றங்கள் செய்யப்படும் அதே வேளையில், ஏராளமான புதிய வசதிகளையும் 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், இன்ஜின் (Engine) மற்றும் கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 6.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
எனவே குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற போட்டி மாடல்களுக்கு எல்லாம் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








