இன்னும் ஒரே நாள்தான்! பைக்ல போறவங்கலாம் கார்ல போக போறாங்க! மாருதி, டாடாவுக்கு இப்பவே நடுக்கம் எடுத்திருக்கும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ரெனால்ட் (Renault). இந்த நிறுவனம் இந்திய சந்தையில் அதன் தயாரிப்புகளை தற்போது அப்டேட் செய்து வருகிறது. இதன்படி ரெனால்ட் ட்ரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Renault Triber Facelift) மாடல் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த வரிசையில் ரெனால்ட் கைகர் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Renault Kiger Facelift) மாடல், வரும் ஆகஸ்ட் 24ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டீசர் வீடியோ (Teaser Video) ஒன்றை ரெனால்ட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனை (Design) பொறுத்தவரையில், புத்தம் புதிய க்ரில் அமைப்பு, ரெனால்ட் நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட புதிய 2டி டைமண்ட் லோகோ, புதிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள், முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்கள் ஆகியவை எல்லாம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வசதிகளை பொறுத்தவரையில், 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ள வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி உடன் கூடிய அதே 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், சீட்பெல்ட் ரிமைண்டர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் ஆகிய வசதிகளையும் (Features) நாம் எதிர்பார்க்கலாம். இவற்றுடன் இன்னும் கூடுதலாக ஏராளமான புதிய வசதிகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் டிசைன் மற்றும் வசதிகளில் அப்டேட்கள் செய்யப்பட்டாலும் கூட, இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) மாற்றங்கள் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. அதாவது தற்போது விற்பனையில் உள்ள ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது.
இதன்படி பார்த்தால், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் கூடிய 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.25 அல்லது 6.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டும்தான் நிர்ணயம் செய்யப்படும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது எங்கள் கருத்து.
விலை குறைவானது என்பதால், முதல் முறையாக கார் வாங்க கூடிய மிடில்-க்ளாஸ் மக்கள், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பரிசீலனை செய்யலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வரும் ஆகஸ்ட் 24ம் தேதிதான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலையில் வந்தால், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை கவரும்.
டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு எல்லாம், 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








