வெறும் 6 லட்சத்துக்கு எஸ்யூவி காரா! இனி எதுக்கு சின்ன ஹேட்ச்பேக் காரை எல்லாம் வாங்கணும்?
இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் கைகர் (Renault Kiger). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. வி3 கார்ஸ் தளம் வெளியிட்டுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 323 கைகர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
ஆனால் அதற்கு முந்தைய ஜூன் மாதம் 755 ரெனால்ட் கைகர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த ஜூலை மாதத்தில், 432 ரெனால்ட் கைகர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 57.22 சதவீத வீழ்ச்சி ஆகும்.

ஆனால் கூடிய விரைவிலேயே ரெனால்ட் கைகர் கார் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய மாடலின் வருகைக்கு பின், ரெனால்ட் கைகர் காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ரெனால்ட் கைகர் காரில், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதி உடன் 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 17.78 செமீ டிஎஃப்டி க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சீட் பெல்ட் ரிமைண்டர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகளையும் ரெனால்ட் கைகர் கொண்டுள்ளது. ஆனால் வேரியண்ட்களை பொறுத்து வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ரெனால்ட் கைகர் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இதில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மேனுவல் மற்றும் ஏஎம்டி என 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களிலும், இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறன்-ஆகதான் உள்ளது.
ரெனால்ட் கைகர் காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் எக்ஸ்-ட்ரானிக் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடலின் பவர் அவுட்புட் 100 பிஎஸ் பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறன்-ஆக உள்ளது.
மறுபக்கம் இந்த இன்ஜினின் எக்ஸ்-ட்ரானிக் சிவிடி கியர் பாக்ஸ் மாடலின் பவர் அவுட்புட் 100 பிஎஸ் பவர் மற்றும் 152 என்எம் டார்க் திறன்-ஆக இருக்கிறது. அதே நேரத்தில் ரெனால்ட் கைகர் காரில் 40 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்படுகிறது. அத்துடன் ரெனால்ட் கைகர் காரில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிஎன்ஜி கிட் ஆப்ஷனும் இருக்கிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் கைகர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.15 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் ரெனால்ட் கைகர் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.23 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 2025 ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், ரெனால்ட் கைகர் காரின் விற்பனை எண்ணிக்கை உயரும். 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனில் நாம் அப்டேட்களை எதிர்பார்க்கலாம். அத்துடன் புதிதாக மேலும் சில வசதிகளையும் நாம் எதிர்பார்க்க முடியும்.
ஆனால் தற்போதைய மாடலில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், புதிய மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என நாங்கள் கருதுகிறோம். புதிய அப்டேட்கள் காரணமாக 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை 6.50 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.


Click it and Unblock the Notifications








