மாருதி, டாடாவுக்கு டஃப் குடுக்கும் பிரான்ஸ் கம்பெனியின் கார்! விலை இவ்ளோதானா! அப்ப கண்ண மூடிட்டு வாங்கலாம்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ரெனால்ட் கைகர் (Renault Kiger). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ரெனால்ட் கைகர் காரின், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

கார் அண்டு பைக் தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 1,151 ரெனால்ட் கைகர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், வெறும் 779 ரெனால்ட் கைகர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Renault Kiger Facelift Side Design

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 372 ரெனால்ட் கைகர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ரெனால்ட் கைகர் காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சிக்கு 2 மிக முக்கியமான காரணங்கள் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

ரெனால்ட் கைகர் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை இதற்கு முதல் காரணமாக இருக்கலாம். 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடல், நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டிருந்த காரணத்தால், ரெனால்ட் கைகர் காரின் விற்பனை உயர்ந்திருக்கலாம்.

Renault Kiger Facelift

2வது காரணம் என்னவென்றால், ஜிஎஸ்டி வரி (GST) வரி குறைப்பு ஆகும். ரெனால்ட் கைகர் ஏற்கனவே மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றுதான். ஆனால் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு, ரெனால்ட் கைகர் காரின் விலை மேலும் குறைந்துள்ளது. இந்த 2 காரணங்களும் ஒருங்கிணைந்து, ரெனால்ட் கைகர் காரை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் கைகர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.34 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர், டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, நிஸான் மேக்னைட், ஸ்கோடா கைலக் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் கார் திகழ்கிறது.

ரெனால்ட் கைகர் கார் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, 6 ஏர்பேக்குகள், டிராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 2, 2025, 23:25 [IST]
English summary
Renault kiger sales report november 2025 1151 units sold
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+