கமுக்கமா நம்ம சென்னைக்கு அருகே உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்! எல்லாமே ஐரோப்பியன் ஸ்டைல்

எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) இந்தியா உள்பட உலகம் முழுவதுமே நல்ல தேவை உருவாகி வருகிறது. பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் காரை வாங்க மக்கள் நிறைய பேர் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனாலேயே கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் புதியதாக எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றன. அதுவும், குறைந்த விலையிலான எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவே கார் கம்பெனிகள் விரும்புகின்றன. ஏனெனில், இந்தியாவில் விலை குறைவான கார்களுக்கே பெரிய அளவிலான மார்க்கெட் உள்ளது.

அந்த வகையில், உலகளவில் பிரபலமான பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட் (Renault) இந்தியாவில் புதியதாக க்விட் இவி (Kwid EV) என்கிற விலை குறைவான எலக்ட்ரிக் காரை களமிறக்குகிறது. இந்தியாவில் தற்போதைக்கு க்விட், டிரைபர் (Triber) மற்றும் கைகர் (Kiger) என்கிற மூன்றே மூன்று ரெனால்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

renault kwid ev in chennai

அவற்றுள், ரெனால்ட் க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்சன் தான், க்விட் இவி ஆகும். ஐரோப்பாவில் இந்த சிறிய அளவிலான எலக்ட்ரிக் கார் டாசியா ஸ்பிரிங் இவி (Dacia Spring EV) என்கிற பெயரில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. இந்தியாவில் க்விட் இவி என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு முன்னதாக நம் நாட்டு சாலைகளில் சிலமுறை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சாலைகளில் இந்த ஐரோப்பிய-ஸ்டைல் எலக்ட்ரிக் கார் எந்த அளவிற்கு தாங்குகிறது என்பதை சோதிக்கும் விதமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், ரெனால்ட் க்விட் இவி எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டங்கள் இனிமேல் தான் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன.

renault kwid ev in chennai

அதற்கு ஏதுவாக, தொழிற்சாலையில் இருந்து க்விட் இவி எலக்ட்ரிக் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. காரின் சோதனை ஓட்டங்களை ஷோரூம் அதிகாரிகள் கவனித்துக் கொள்வர். அதுகுறித்த விபரங்களை ரெனால்ட் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பர். இவ்வாறு, டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ரெனால்ட் க்விட் இவி எலக்ட்ரிக் கார் ஒன்று சென்னையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு அருகே லாரி ஒன்றில் க்விட் இவி எலக்ட்ரிக் கார் கொண்டு செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. வழக்கம்போல் இந்த படங்களிலும் க்விட் எலக்ட்ரிக் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும், இந்த முறை காரின் சில அம்சங்களை மறைப்புகளை தாண்டி நம்மால் பார்க்க முடிகிறது.

renault kwid ev in chennai

குறிப்பாக, காரின் பின்பக்கத்தில் Y-வடிவில் புதிய டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. க்விட் இவி எலக்ட்ரிக் காரின் விலை குறைவான வேரியண்ட்டாக இது இருக்கலாம். ஏனெனில், காரின் அலாய் சக்கரங்களுக்கு பதிலாக இரும்பு சக்கரங்கள் உள்ளன. அதேபோல், காரின் பின்பக்க விண்ட்ஷீல்டில் வழங்கப்பட்டுள்ள வைபர்களையும் பார்க்க முடிகிறது.

ஐரோப்பாவில் டாசியா ஸ்பிரிங் இவி எலக்ட்ரிக் கார் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இரு விதமான எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் விலை குறைவான வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 44 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரும், விலைமிக்க வேரியண்ட்டில் 64 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனத்துக்கு சென்னைக்கு அருகே ஒரகடம் பகுதியில்தான் கார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இருப்பினும், சென்னை விமான நிலையத்திற்கு அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட போது இந்த க்விட் இவி எலக்ட்ரிக் கார் காட்சி தந்திருப்பதால், இதனை ரெனால்ட் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து கூட கொண்டுவந்து இருக்கலாம். தற்போது ஏதோ ஒரு ஷோரூமுக்கு கொண்டு செல்லப்படுவதால், வரும் நாட்களில் இந்த க்விட் இவி எலக்ட்ரிக் காரை சென்னை சாலைகளில் சோதனை ஓட்டத்தில் காணலாம்.

Source: Team-BHP

More from DriveSpark

Article Published On: Thursday, May 29, 2025, 19:29 [IST]
English summary
Renault kwid ev electric car spotted in chennai check all details here
மேலும்... #renault #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X