5 லட்ச ரூபா எலக்ட்ரிக் கார் மாதிரியே இல்லையே!! ரெனால்ட் கம்பெனிக்கு மிடில்-கிளாஸ் மக்களின் கோடி நன்றி!!
ரெனால்ட் (Renault), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனம். இந்திய சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே பெரிதும் போராடி வருகிறது. ஆனால் அந்த போராட்டங்களில் இருந்து ரெனால்ட்டிற்கு பெரியதாக எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில், மற்ற கார் நிறுவனங்களை போன்று ரெனால்ட்டும் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) களமிறக்க தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இணையத்தில் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னைக்கு அருகே உள்ள ரெனால்ட் டிசைன் செண்டரில் (Design Centre) எடுக்கப்பட்ட இந்த படத்தில், இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இல்லாத ரெனால்ட் எலக்ட்ரிக் கார் ஒன்று காட்சி தருகிறது. பொதுவாக, இவ்வாறு அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள காரை அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை செய்வதாக இருந்தாலோ அல்லது மற்ற விஷயங்களுக்காக ஆய்வு செய்வதாக இருந்தாலோ காரை முழுவதுமாக மறைப்பது வழக்கம்.

அறிமுகத்திற்கு முன்னதாக காரின் டிசைன் வெளியே கசிந்துவிட கூடாது என்பதற்காக, காரை மறைப்புகளால் மறைப்பர். ஆனால், தற்போது சென்னையில் காட்சி தந்துள்ள ரெனால்ட் எலக்ட்ரிக் கார் அவ்வாறு எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், இந்த படத்தில் காட்சி தருவது ரெனால்ட் க்விட் இவி (Kwid EV) என்கிற எலக்ட்ரிக் கார் ஆகும்.
அதாவது, மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள ரெனால்ட் க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்சன் தான் இந்த க்விட் இவி ஆகும். இவை இரண்டிற்கும் இடையே தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. இதனால்தான், இந்த படத்தில் க்விட் இவி எலக்ட்ரிக் கார் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த படம் ஆனது ரெனால்ட் டிசைன் செண்டரின் வளாகத்திற்கு உள்ளே கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டது ஆகும்.

ரெனால்ட் க்விட் இவி ஆனது இந்திய மார்க்கெட்டில் அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள மற்றொரு விலை குறைவான எலக்ட்ரிக் காராக விளங்குகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்வது என்பது ரெனால்ட் நிறுவனத்துக்கு இப்போது அல்ல... 2020ஆம் ஆண்டில் இருந்தே மண்டையில் ஓடிக் கொண்டிருக்கும் விஷயம் ஆகும்.
ரெனால்ட் க்விட் காரை அடிப்படையாக கொண்டு 2020 சமயத்தில் சிட்டி கே-இசட்.இ (City K-ZE) என்கிற எலக்ட்ரிக் காரை ரெனால்ட் உருவாக்கியது. இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது. ஆனால், இந்த சிட்டி கே-இசட்.இ எலக்ட்ரிக் கார் அதன்பின் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இன்னமும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை.
2020க்கு பின் தற்போது இந்திய கார்கள் மார்க்கெட்டும் மாறிவிட்டது. அதே யுக்தியை பின்பற்றி எலக்ட்ரிக் கார்களை ரெனால்ட் அறிமுகம் செய்வது சரியானதாக இருக்காது. அதாவது, க்விட் இவி போன்ற சிறிய அளவிலான எலக்ட்ரிக் காருக்கு 2020-21 சமயங்களில் ஓரளவிற்கு மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்தது. ஆனால் தற்போது மக்களின் இரசனை கொஞ்சம் பெரிய அளவிலான எலக்ட்ரிக் கார்களின் பக்கம் சென்றுவிட்டது.
க்விட் இவி போன்ற சிறிய அளவிலான எலக்ட்ரிக் காரை வாங்குவதற்கு பதிலாக ஓரளவுக்கு அளவில் பெரியதான எலக்ட்ரிக் காரை வாங்கவே மக்கள் நிறைய பேர் விரும்புகின்றனர். அதற்காக கொஞ்சம் செலவு செய்தாலும் பரவாயில்லை என்பதுதான் எலக்ட்ரிக் காரை வாங்க விரும்பும் பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. இதில் இருந்து மக்களில் பொருளாதார நிலை முன்னேற்றம் கண்டுவருவதை அறிய முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, ரெனால்ட் க்விட் ஆகும். இதன் எலக்ட்ரிக் வெர்சனின் விலையை ரூ.5 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம். 5 லட்ச ரூபாயில் எலக்ட்ரிக் கார் என்பது கவர்ச்சிக்கரமான விலையாக இருப்பினும், இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் காரில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ரேஞ்ச் எந்த அளவிற்கு இருக்கும் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.


Click it and Unblock the Notifications








