டாடா நானோ போல் அடிமாட்டு விலையில் புது எலெக்ட்ரிக் கார்! பைக் வாங்கறதுக்கு பதில் இத வாங்கி 5 பேர் ஒன்னா போலாம்

இந்திய சந்தையில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில், டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) போன்ற எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் மிகவும் விலை குறைவானவை ஆகும்.

ஆனால் கூடிய விரைவில் இந்த 2 விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுக்கும், சந்தையில் கடுமையான போட்டி ஏற்படும் என கருதப்படுகிறது. ரெனால்ட் க்விட் இவி (Renault Kwid EV) எலெக்ட்ரிக் காரின் வருகைதான் இதற்கு காரணம். ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கடந்த 2020ம் ஆண்டில் இருந்தே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Renault Kwid

ஆனால் இத்தனை வருடங்களாக நடக்காத இந்த விஷயம், கூடிய விரைவில் நடக்க போவதாக கூறப்படுகிறது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார், விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை எதிர்பார்த்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Renault Kwid Side View

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.14 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

மறுபக்கம் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 7.50 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் இதை காட்டிலும் மிகவும் குறைவான விலையில் ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் க்விட் இவி மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் கூட, ஒரு முறை முழுமையாக நிரப்பினால், சுமார் 200-220 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய கூடிய பேட்டரி தொகுப்பை கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த விலைக்கு இது ஓரளவிற்கு சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகவே இருக்கும்.

எனவே இது விலை குறைவானதாக இருந்தாலும், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 பேர் பயணம் செய்ய கூடிய ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் வருகை, டாடா டியாகோ இவி மற்றும் எம்ஜி கோமெட் இவி ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 4, 2025, 22:58 [IST]
English summary
Renault kwid ev india launch soon expected price driving range and more
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+