வெறும் நாலே முக்கா லட்சத்துக்கு புது காரா! அடிக்கடி டாக்ஸி புக் பண்ணீட்டே இருக்கறதுக்கு பேசாம இதை வாங்கீரலாம்!
கார் என்பது ஒரு காலத்தில் ஆடம்பரமான ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் அது தற்போது அத்தியாவசியமானதாக மாறியுள்ளது. பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை சார்ந்து இருக்காமல், சுதந்திரமாக பயணம் மேற்கொள்வதை சொந்த கார்கள் உறுதி செய்கின்றன. ஆனால் இந்தியாவின் மிடில்-க்ளாஸ் மக்கள் பலரால், இன்னமும் சொந்த கார் கனவை நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கிறது. கார்கள் விலை உயர்ந்தவை என்பதுதான் இதற்கு காரணம். ஒருவேளை சிறுக சிறுக சேமித்து கார்களை வாங்கி விட்டாலும் கூட, அவற்றின் பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதால், மிடில்-க்ளாஸ் குடும்பங்கள் தடுமாறும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.
ஆனால் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற கார்களை வாங்கினால், பொருளாதார ரீதியிலான பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கலாம். ஏனெனில் ரெனால்ட் க்விட் காரின் விலை மிகவும் குறைவு. அத்துடன் அதை பராமரிப்பதற்கும் கூட அதிக செலவு எல்லாம் ஆகாது. எனவே இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் கார் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரெனால்ட் க்விட் காருக்கு சரியாக அமையவில்லை. விற்பனையில் மிக கடுமையான சரிவை ரெனால்ட் க்விட் சந்தித்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 977 க்விட் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரெனால்ட் நிறுவனத்தால் 595 க்விட் கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது.
இது 39 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டால், ரெனால்ட் க்விட் காரின் விற்பனை சற்றே உயர்ந்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 532 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த ஏப்ரல் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 595 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையாகியுள்ளன.

இது 10.59 சதவீத வளர்ச்சி ஆகும். ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (RXE 1.0L) விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் (CLIMBER 1.0 AMT DT) விலை 6.45 லட்ச ரூபாய் மட்டுமே. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
இது மிகவும் விலை குறைவான கார் என்பதால், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) மட்டுமே வழங்கப்படுகிறது. அது 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 69 பிஎஸ் பவர் மற்றும் 92.5 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
விலை குறைவான காராக இருந்தாலும் கூட, 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே, எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரியர் வியூ கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்ற வசதிகளை (Features) எல்லாம் ரெனால்ட் க்விட் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் 12 சதவீத குடும்பங்கள் மட்டுமே சொந்தமாக கார் வாங்க கூடிய சூழலில் இருப்பதாக தற்போது வெளியாகி வரும் தரவுகள் தெரிவிக்கின்றன. மீதி 88 சதவீத குடும்பங்களால், சொந்தமாக கார் வாங்க முடியவில்லை. விலை குறைவான கார்களை கூட அவர்களால் வாங்க முடியாத சூழல் உள்ளது.
க்விட் காரின் வீழ்ச்சிக்கு பின்னால், டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்கள் வழங்கி வரும் கடுமையான போட்டி உள்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. இருப்பினும் குறைவான விலையில் ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு க்விட் நல்ல ஆப்ஷன்தான். இது போன்ற ப்ளஸ் பாயிண்ட்கள் காரணமாக, வரும் காலங்களிலாவது க்விட் காரின் விற்பனை எண்ணிக்கை உயருமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








