வெறும் நாலரை லட்சத்துக்கு 23 கிமீ மைலேஜ் குடுக்கற காரா! அப்ப எதை பத்தியும் யோசிக்காம கண்ண மூடிட்டு வாங்கலாம்!

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Hatchback Cars) நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறைவான விலை, அதிக மைலேஜ் மற்றும் ஓட்டுவது எளிது போன்ற காரணங்களால்தான், ஹேட்ச்பேக் ரக கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். அப்படி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாக ரெனால்ட் க்விட் (Renault Kwid) திகழ்கிறது. இந்த காரின் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் ரெனால்ட் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 628 க்விட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய நவம்பர் மாதம் வெறும் 546 ஆக மட்டுமே இருந்தது. இது 13.06 சதவீத வளர்ச்சி ஆகும்.

Renault Kwid

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் வெறும் 4.70 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே ரெனால்ட் க்விட் காரை உங்களால் வாங்கி விட முடியும். இது ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட, 6.45 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விலை குறைவான கார் என்றாலும் கூட, 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் கீலெஸ் எண்ட்ரி போன்ற வசதிகள் (Features) எல்லாம், ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

Renault Kwid Car

செயல்திறனை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 68 பிஎஸ் பவர் மற்றும் 91 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso), டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்களுக்கு எல்லாம் ரெனால்ட் க்விட் மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட, ரெனால்ட் க்விட் கார், வளர்ச்சியை பதிவு செய்திருப்பது ரெனால்ட் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயங்களில் ஒன்றாக இருக்கும். இது மிடில்-க்ளாஸ் மக்களுக்கு ஏற்ற விலை குறைவான கார் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

முதல் முறையாக சொந்தமாக ஒரு காரை வாங்கலாம் என யோசித்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், ரெனால்ட் க்விட் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். இதில் இருந்து பின்னர் படிப்படியாக வேறு கார்களுக்கு 'அப்டேட்' ஆவது சிறப்பாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன் இது நல்ல மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இருப்பதிலேயே அதிகபட்சமாக ரெனால்ட் க்விட் காரின் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 26, 2025, 15:55 [IST]
English summary
Renault kwid sales report december 2024 13 per cent growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+