விலை 5 லட்சம் கூட இல்ல! மிடில் க்ளாஸ் மக்களுக்குனே இந்த காரை பாத்து பாத்து உருவாக்கியிருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் 698 க்விட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதற்கு முந்தைய ஜனவரி மாதம் வெறும் 569 ஆக மட்டுமே இருந்தது.

இது 18.48 சதவீத வளர்ச்சி ஆகும். ரெனால்ட் க்விட் கார் இந்தியாவின் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மிகவும் ஏற்றது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 6.45 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Renault Kwid

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். சமீபத்தில் ரெனால்ட் க்விட் காரில் சிஎன்ஜி கிட் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ரெனால்ட் க்விட் காரின் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் / மேனுவல் கியர் பாக்ஸ் வேரியண்ட்களுக்கு இந்த சிஎன்ஜி கிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது ரெனால்ட் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிஎன்ஜி கிட் ஆகும். ஆனால் தற்போதைய நிலையில் குறிப்பிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இந்த சிஎன்ஜி கிட் கிடைக்கிறது. அதாவது மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், டெல்லி மற்றும் ஹரியானா என ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தற்போது இந்த சிஎன்ஜி கிட் கிடைக்கும்.

Maruti Suzuki Alto K10

இருப்பினும் வரும் மாதங்களில் படிப்படியாக இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ரெனால்ட் க்விட் காரின் இந்த சிஎன்ஜி கிட்-டை அறிமுகம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சிஎன்ஜி கிட்-களுக்கு 3 வருடம் வாராண்டி வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ரெனால்ட் க்விட் காரின் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் / 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் அதிகபட்சமாக 68 பிஎஸ் பவர் மற்றும் 91 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி கிட்-கள் பொருத்தப்பட்டால், பவர் மற்றும் டார்க் திறன் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்யும் மிகவும் விலை குறைவான கார் என்றால், அது ரெனால்ட் க்விட்தான். எனவே முதல் முறையாக ஒரு புதிய காரை வாங்கலாம் என முடிவு செய்துள்ள நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு ரெனால்ட் க்விட் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) ஆகிய கார்களுக்கு எல்லாம், ரெனால்ட் க்விட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, March 29, 2025, 23:53 [IST]
English summary
Renault kwid sales report february 2025 18 per cent growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+