வெறும் நாலே முக்கா லட்சத்துக்கு புது காரா! அதுவும் ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளோட!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இது இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ரெனால்ட் க்விட் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன் காரணமாக 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே, அதாவது அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 6 வருடங்களிலேயே, 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ரெனால்ட் க்விட் கடந்தது. ஆனால் சமீப காலமாக ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் 3 இலக்க எண்ணிக்கையில் மட்டும்தான் ரெனால்ட் க்விட் கார் விற்பனையாகி கொண்டுள்ளது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதமும் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மிகவும் மந்தமாகதான் இருந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது தெரிய வந்துள்ளது.
இதன்படி பார்த்தால், ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், 449 க்விட் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், 603 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 26 சதவீத வீழ்ச்சியை ரெனால்ட் க்விட் சந்தித்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் மட்டுமல்லாது, நடப்பு 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிட்டாலும் கூட, ரெனால்ட் க்விட் கார் விற்பனையில் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், 540 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் அதன் பின் வந்த ஜூன் மாதத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 449 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இந்த வகையில் பார்த்தால் ரெனால்ட் க்விட் கார் 16.85 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதை இந்த எண்கள் தெளிவாக எடுத்து காட்டுகின்றன.
இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 6.45 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ரெனால்ட் க்விட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும், ஸ்டாண்டர்டாக 15 பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வழங்கப்படுகின்றன.
அத்துடன் 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் என ஏகப்பட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மந்தமாகவே இருந்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso), மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்களுக்கு எல்லாம், ரெனால்ட் க்விட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








