ஒரு காலத்துல சிங்கம் மாதிரி இருந்த கார்... இன்னைக்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா? பாக்கவே பாவமா இருக்கு...

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும் கூட, இதன் டிசைன் எஸ்யூவி (SUV) ரக கார்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே ஒரு சாயலில் எஸ்யூவி கார் போன்ற உணர்வை ரெனால்ட் க்விட் வழங்கும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ஆரம்ப நிலை RXE 1.0L வேரியண்ட்டின் விலை ஆகும்.

Renault Kwid

மறுபக்கம் ரெனால்ட் க்விட் காரின் டாப் வேரியண்ட்டான CLIMBER 1.0 AMT DT வேரியண்ட்டின் விலை 6.45 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும். இவ்வளவு விலை குறைவானதாக இருந்தாலும் கூட, இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை 'டல்' அடிக்கிறது.

இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு மே மாதமும் விதிவிலக்கு அல்ல. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 540 க்விட் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை 743 ஆக இருந்தது.

Maruti Suzuki Alto K10

இது 27 சதவீத வீழ்ச்சி ஆகும். இது போதாதென்று, நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டாலும், ரெனால்ட் க்விட் கார் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 595 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதன் பின் வந்த மே மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 540 ஆக சரிவடைந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், ரெனால்ட் க்விட் காரின் விற்பனை 9.24 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago), மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) ஆகிய கார்களுடன், ரெனால்ட் க்விட் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு தசாப்தம் (10 ஆண்டுகள்) நிறைவடைய போகிறது. இது கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கார் ஆகும். ஆரம்பத்தில் ரெனால்ட் க்விட் காருக்கு மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு இருக்கவே செய்தது. எனவே சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ரெனால்ட் க்விட் பதிவு செய்து கொண்டிருந்தது.

ஆனால் போட்டி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாளடைவில் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை 'டல்' அடிக்க தொடங்கி விட்டது. இது தவிர இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது மிகவும் விலை குறைவான சிறிய கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ரெனால்ட் க்விட் காரின் வீழ்ச்சிக்கு ஒரு வகையில் இதுவும் காரணம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2025, 22:53 [IST]
English summary
Renault kwid sales report may 2025 27 per cent down
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+