சும்மா குடுத்தா கூட யாருமே வாங்கமாட்டாங்கலாட்ட இருக்கு! இந்த காருக்கு இப்படி ஒரு நிலைமையா! அதிர்ச்சியா இருக்கு
இந்திய சந்தையில் ஒரு காலத்தில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் சிறிய ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' இருந்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. விலை குறைவான சிறிய ஹேட்ச்பேக் கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை.
இதற்கு ரெனால்ட் க்விட் (Renault Kwid) ஒரு உதாரணம். ரெனால்ட் க்விட் கார் இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தைக்கு என ரெனால்ட் நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கிய முதல் கார் இதுதான். இதன் காரணமாக ஆரம்ப காலத்தில் ரெனால்ட் க்விட் காருக்கு நல்ல வரவேற்பு இருக்கவே செய்தது.

ரெனால்ட் க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் அதன் ஆரம்ப விலை வெறும் 2.57 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்தது (தற்போதும் கூட இதன் ஆரம்ப விலை மிகவும் குறைவுதான். தற்போதைய விரிவான விலை விபரத்தை இந்த செய்தியின் கடைசியில் பார்க்கலாம்).
இதன் காரணமாக 2021ம் ஆண்டிலேயே 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை (Sales Milestone) ரெனால்ட் க்விட் கடந்தது. ஆனால் சமீப காலமாக ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல.

ரெனால்ட் க்விட் காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 447 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 546 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 99 ரெனால்ட் க்விட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் ரெனால்ட் க்விட் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.
மிகவும் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, ரெனால்ட் க்விட் காரில், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரியர் வியூ கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் என ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விற்பனையில் ரெனால்ட் க்விட் காருக்கு மட்டும் இந்த மோசமான நிலைமை ஏற்படவில்லை. மாறாக இந்திய சந்தையில் குறைவான விலையில் கிடைக்கும் பெரும்பாலான சிறிய ஹேட்ச்பேக் ரக கார்களுக்கும் விற்பனை சரிவு என்ற இந்த மோசமான நிலைமைதான் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








