பிரான்ஸ் நிறுவனத்தின் காரை வெறும் நாலே கால் லட்சத்துக்கு விக்கறாங்களா! பைக் வாங்கறதுக்கு பதிலா இதை வாங்கலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வி3 கார்ஸ் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், ரெனால்ட் நிறுவனம் 554 க்விட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் வெறும் 512 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டும்தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த அக்டோபர் மாதத்தில், 42 ரெனால்ட் க்விட் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரெனால்ட் க்விட் கார் விற்பனையில் 7.58 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
விற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கூட, பொதுவாக பார்த்தால், ரெனால்ட் க்விட் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவான ஒன்றாகவே உள்ளது. இதற்கு காரணம் இந்திய வாடிக்கையாளர்களின் மனநிலையில் சமீப கால அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அதாவது மிகவும் விலை குறைவான மற்றும் அளவில் சிறிய ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. இதன் காரணமாக ரெனால்ட் க்விட் மட்டுமல்லாது, மற்ற ஒரு சில ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனையும் கூட மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் (Chennai Ex-Showroom Price) விலை ஆகும்.
மிகவும் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ரியர் வியூ கேமரா போன்ற வசதிகள் (Features) எல்லாம், ரெனால்ட் க்விட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஏபிஎஸ், 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளையும் ரெனால்ட் க்விட் கார் கொண்டுள்ளது. எனவே இது வாடிக்கையார்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுக்கு எல்லாம், பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








