வெறும் 6 லட்சத்திற்கு களமிறங்க போகும் புது எலெக்ட்ரிக் கார்! இந்தியாவே இதுக்காகதான் வெயிட்டிங்!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்றால், ஒரு சில கார்கள் மட்டுமே ஒருவரின் மனதிற்கு உடனடியாக நினைவிற்கு வரும். இதில், ரெனால்ட் க்விட் (Renault Kwid) கண்டிப்பாக ஒன்றாக இருக்கும். இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது.

வி3 கார்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 512 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 235 ஆக மட்டுமே இருந்தது.

Renault Kwid E-Tech Side Design

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த செப்டம்பர் மாதத்தில், 277 ரெனால்ட் க்விட் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரெனால்ட் க்விட் கார் விற்பனையில் 54.10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

Renault Kwid

இவை அனைத்துமே ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக ரெனால்ட் க்விட் இருக்கிறது.

ரெனால்ட் க்விட் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரியர் வியூ கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் மற்றும் ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் பிரேக் அஸிஸ்ட் உடன் இபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகளையும் ரெனால்ட் க்விட் கொண்டுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் நிறுவனம் கூடிய விரைவில் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் வெர்ஷனின் வருகைக்கு பின்னர், ரெனால்ட் க்விட் காரின் விற்பனை உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 23, 2025, 23:56 [IST]
English summary
Renault kwid sales report september 2025 54 10 per cent growth
மேலும்... #renault #india #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+