ரூ. 6.1 லட்சத்திற்கு 7பேர் பயணிக்கும் கார் அறிமுகம்.. ஆரம்ப நிலை வேரியண்டிலேயே இவ்ளோ வசதிகளை தந்திருக்காங்களா!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் (Renault) 2025 ட்ரைபர் (Triber) மற்றும் கைகர் (Kiger) ஆகிய கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இரண்டிற்கும் ஆரம்ப விலையாக ரூ. 6.1 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் ட்ரைபர் காருக்கும் ரூ. 6.1 லட்சத்தை ரெனால்ட் நிர்ணயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இதில் ஒரே நேரத்தில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

இத்தகைய காருக்கே மலிவு விலையை நிறுவனம் செய்திருக்கின்றது. இது மட்டுமல்ல இரண்டு கார் மாடல்களின் ஆரம்ப நிலை வேரியண்டுகளிலும் இம்முறையும் அதிக சிறப்பம்சங்களை நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமல்ல இ20 வகை எரிபொருளில் இயங்கக் கூடியதாகவும் அந்த கார்களை ரெனால்ட் நிறுவனம் தற்போது மாற்றியிருக்கின்றது.

2025 Renault kiger and triber launched

விலை விபரம்: இந்த கார் மொத்தமாக சந்தையில் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆர்எக்ஸ்இ (RXE) இதுவே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதற்கே ரூ. 6.1 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் உயர்நிலை தேர்வின் விலை ரூ. 8.75 ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோல், கைகர் கார் மாடலுக்கும் ரூ. 6.1 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 11 லட்சம் ஆகும். இந்த கார் மாடல் ஆர்எக்ஸ், ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி பிளஸ் மற்றும் ஆர்எக்ஸ் இசட் ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

2025 Renault kiger launched

என்ன மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன? ரெனால்ட் நிறுவனம் கைகர் மற்றும் ட்ரைபர் இரண்டு கார் மாடல்களிலும் கணிசமான மாற்றஹ்களைச் செய்திருக்கின்றது. அந்தவகையில், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்துடன், சென்ட்ரல் லாக்கிங் வசதிக் கொண்ட டோர்கள், பவர்டு ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றையும் இந்த கார்களில் வழங்கி இருக்கின்றனர். மேலும், கைகர் கார் மாடலின் உயர் நிலை வேரியண்டில் ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்தே இந்த கார்களில் பயன்படுத்தப்படும் எஞ்சினை இ20 தர எரிபொருளில் இயங்குகின்ற மாற்றத்தையும் அவர்கள் செய்திருக்கின்றனர்.

எஞ்சினைப் பொருத்த வரை கைகர் மாடலில் இரண்டு மோட்டார் ஆப்ஷன்களும், ட்ரைபர் கார் மாடலில் ஒற்றை எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இரண்டு கார் மாடல்களிலும் வழங்கப்படும் மோட்டார் ஆப்ஷனாக 1.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் எஞ்சின் இருக்கின்றது. இத்துடன் சேர்த்தே கைகர் கார் மாடலில் மட்டும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் கூடுதலாக வழங்கப்படுகின்றது.

இது 100 பிஎஸ் மற்றும் 160 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. முன்னதாக பார்த்த மோட்டார் ஆப்ஷன்அதிகபட்சமாக 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல், 5 ஏஎம்டி மற்றும் சிவிடி ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மலிவு விலை எம்பிவி ரக கார் மாடல்களில் ட்ரைபர்-ம் ஒன்றாகும். இதற்கு இப்போதும் அதே குறைவான விலையை ரெனால்ட் நிறுவனம் நிர்ணயம் செய்திருப்பது எம்பிவி கார் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, February 17, 2025, 15:45 [IST]
English summary
Renault launches 2025 kiger and triber in india with enhanced features and pricing
மேலும்... #renault #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+