இந்த கார் கம்பெனிகளை நிறைய பேர் மறந்துட்டாங்க! ஷோரூம்களில் ஈ ஆடுது... ஏப்ரலில் எவ்வளவு சேல்ஸ் தெரியுமா?

ரெனால்ட் (Renault), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். ஆனால் ஏனோ இந்திய மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாக போராடி கொண்டிருக்கிறது. இதேபோன்று, இந்திய மார்க்கெட்டில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடைப்பெற்று செல்லலாம் என்கிற அளவிற்கு ஃபுட்போர்டு அடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு கார் நிறுவனம் நிஸான் (Nissan) ஆகும். ஜப்பானிய கார் நிறுவனமான இதற்கும், பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட்டிற்கும் இடையே எப்படியோ கூட்டணி ஏற்பட்டு, இந்த நிறுவனங்களும் ஒன்றாக இந்தியாவில் தங்களது வணிகத்தை கவனித்து வருகின்றன.

இந்த கூட்டணி இப்போதோ அல்லது நேற்றோ உருவானது இல்லை, 1999ஆம் ஆண்டில் உருவானது ஆகும். என்னதான் கூட்டணி போட்டு பிஸ்னஸை கவனித்துக் கொண்டாலும், இந்த இரு நிறுவனங்களின் கார்கள் விற்பனை இந்தியாவில் மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருகிறது. இது கடந்த 2025 ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

renault nissan car sales report

முதலில் ரெனால்ட் நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை நிலவரத்தை பார்த்துவிடுவோம். ஏனெனில், ரெனால்ட்டில் இருந்துதான் அதிக எண்ணிக்கையிலான கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. எத்தனை மாடல்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? மொத்த மூன்று விதமான கார் மாடல்கள் ரெனால்ட்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதுவே அதிகம் என்றால், நிஸானில் இருந்து எத்தனை என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். அதனை பற்றி பின்னர் பார்ப்போம்.

ரெனால்ட்டில் இருந்து இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 602 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 ஏப்ரல் மாதத்தில் 3 ஆயிரத்து 707 கார்களை ரெனால்ட் விற்பனை செய்து இருந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் ரெனால்ட் கார்கள் விற்பனை சுமார் 30% குறைந்துள்ளது.

renault nissan car sales report

இதற்கு முக்கிய காரணம், ரெனால்ட்டில் இருந்து விற்பனை செய்யப்படும் மூன்று கார் மாடல்களின் விற்பனையும் கணிசமாக குறைந்திருப்பது ஆகும். கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் காராக முதலிடத்தை பிடித்து இருக்கும் டிரைபர் (Triber)-இன் விற்பனையும் 16% குறைந்துள்ளது. 2024 ஏப்ரலில் 1,671 டிரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 1,401 டிரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் நீண்ட வருடங்களுக்கு தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் ரெனால்ட் காராக டிரைபரை சொல்லலாம். ஆனால் அதற்கே இந்த நிலைமை என்றால், மற்ற இரு கார்களை பற்றி சொல்ல வேண்டும்? டிரைபருக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள கைகர் (Kiger) கடந்த ஏப்ரல் மாதத்தில் 606 யூனிட்களும், கடைசி இடத்தில் உள்ள க்விட் (Kwid) 595 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இவை இரண்டும் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் முறையே 1,059 மற்றும் 977 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. நிஸான் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தில் இருந்து தற்சமயம் வெறும் இரு கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஒன்றான எக்ஸ்-டிரைல் (X-Trail) ஆனது விலையுயர்ந்த கார் என்பதால், ஒரேயொரு பட்ஜெட் விலையிலான கார் மட்டுமே நிஸானில் இருந்து இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.

அது வேறெதுவும் இல்லை... நிஸான் மேக்னைட் (Magnite) ஆகும். கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 1,749 மேக்னைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரத்து 404 மேக்னைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, மேக்னைட் கார்கள் விற்பனை ஆனது 27% குறைந்துள்ளது. மேக்னைட் இல்லாமல், கடந்த ஏப்ரல் மாதத்தில் 76 எக்ஸ்-டிரைல் கார்களையும் நிஸான் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2020இல் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் கார் இந்தியாவில் நிஸான் நிறுவனத்துக்கு இரண்டாவது இன்னிங்க்ஸை ஏற்படுத்திக் கொடுக்கும் என்கிற அளவிற்கு கூறப்பட்டது. ஆனால், இந்திய மார்க்கெட்டில் நிஸானின் நிலைமை அப்படியே தான் உள்ளது. அதேபோல், ரெனால்ட் நிறுவனமும் தொடர்ந்து சறுக்கலை கண்டு வருவதால், இந்த இரு நிறுவனங்களும் இந்திய மார்க்கெட்டிற்கு என புதிய யுக்திகளை கொண்டுவர வேண்டிய சூழலில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, May 16, 2025, 22:28 [IST]
English summary
Renault nissan car sales report of april 2025 check all details here
மேலும்... #renault #nissan #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+