எப்படி இருந்த ஜப்பான் கார் கம்பெனி... ஒரேயொரு கார் மட்டும்தான் விற்பனை ஆகுது! செப்டம்பர் சேல்ஸ் ரிப்போர்ட்!

ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் தங்களது இந்திய சந்தைக்கான விரிவாக்கத் திட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. கடந்த 2025 செப்டம்பர் மாத விற்பனை அறிக்கையின்படி, இந்தியாவில் கார்கள் விற்பனையில் ரெனால்ட் சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும், நிசான் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளது. எனினும், இரு நிறுவனங்களும் 2026-ஆம் ஆண்டுக்குள் பல புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.

2025 செப்டம்பரில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ரெனால்ட் 10-வது இடத்தையும், நிசான் 12-வது இடத்தையும் பிடித்துள்ளன. ரெனால்டின் சந்தைப் பங்கு முந்தைய ஆண்டை விட 0.2% அதிகரித்து 1.1% ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், நிசானின் சந்தைப் பங்கு 0.6%-இல் இருந்து 0.4% ஆகக் குறைந்துள்ளது.

renault nissan cars 2025 september sales report

தற்போது ரெனால்ட் நிறுவனம் டிரைபர், கைகர், க்விட் ஆகிய மூன்று கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. நிசான், தனது மேக்னைட் மாடலை மட்டுமே உள்நாட்டு சந்தையில் நம்பியுள்ளது. இருப்பினும், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் டெக்டன் என்கிற புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்து தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்த நிசான் தயாராகி வருகிறது.

ரெனால்ட் இந்தியா, 2025 செப்டம்பரில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த செப்டம்பரில் 4,265 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட 3,217 ரெனால்ட் கார்களை விட 33% அதிகமாகும். மேலும், 2025 ஆகஸ்ட்டில் விற்பனையான 3,015 ரெனால்ட் கார்களை விடவும் 41% அதிகம்.

No Renault Sep-25 Sep-24 Diff Growth % YoY Share % Sep 25
1 Triber 2,587 1,538 1,049 68.21 60.66
2 Kiger 1,166 988 178 18.02 27.34
3 Kwid 512 691 -179 -25.90 12.00
- Total 4,265 3,217 1,048 32.58 100.00
No Renault Sep-25 Aug-25 Diff Growth % MoM Share % Aug 25
1 Triber 2,587 1,870 717 38.34 62.02
2 Kiger 1,166 910 256 28.13 30.18
3 Kwid 512 235 277 117.87 7.79
- Total 4,265 3,015 1,250 41.46 100.00

ரெனால்ட் நிறுவனத்தின் பல்வேறு வகையான மற்றும் மதிப்புமிக்க கார்கள் இந்திய வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. ரெனால்ட் டிரைபர் கடந்த மாதத்தில் 2,587 யூனிட்கள் விற்பனையுடன் முன்னிலை வகிக்கிறது. இதன் விற்பனை முந்தைய ஆண்டை விட 68% (1,538 யூனிட்கள்) மற்றும் முந்தைய மாதத்தை விட 38% (1,870 யூனிட்கள்) அதிகரித்துள்ளது.

2025 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலான ரெனால்ட் கைகர், 1,166 யூனிட்கள் விற்கப்பட்டு, முந்தைய ஆண்டை விட 18% வளர்ச்சியையும், முந்தைய மாதத்தை விட 28% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் ரெனால்ட் க்விட் கடந்த மாதத்தில் 512 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

renault nissan cars 2025 september sales report

2024 செப்டம்பரை விட இதன் விற்பனை 26% குறைந்திருந்தாலும், 2025 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 235 யூனிட்களை விட 118% அதிகரித்துள்ளது. இந்தியாவில் விரைவில் வரவிருக்கும் க்விட் இவி எலெக்ட்ரிக் காருக்கான எதிர்பார்ப்பும் இந்த வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

renault nissan cars 2025 september sales report

மறுப்பக்கம், நிசான் இந்தியா நிறுவனம் 2025 செப்டம்பரில் 1,652 யூனிட் மேக்னைட் கார்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 21% (2,100 யூனிட்கள்) குறைவு. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையான 1,382 மேக்னைட் கார்களை விட 19% வளர்ச்சி ஆகும்.

No Nissan Sep-25 Sep-24 Diff Growth % YoY Share % Sep 25
1 Magnite 1,652 2,100 -448 -21.33 100.00
2 X-Trail 0 13 -13 - 0.00
- Total 1,652 2,113 -461 -21.82 100.00
No Nissan Sep-25 Aug-25 Diff Growth % MoM Share % Aug 25
1 Magnite 1,652 1,384 268 19.36 100.00
2 X-Trail 0 0 0 0.00 0.00
- Total 1,652 1,384 268 19.36 100.00

ஜிஎஸ்டி 2.0 அமைப்பு மூலம் நிசான் மேக்னைட் காரில் ஒரு லட்சம் ரூபாய் வரை விலைக் குறைப்பு செய்யப்பட்டதால், பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் மத்தியில் ஒரு புதிய C-பிரிவு எஸ்யூவியையும், அதைத் தொடர்ந்து ரெனால்ட் டிரைபர் காரை போன்று ஒரு 7-இருக்கை எம்பிவி காரையும் நிசான் அறிமுகப்படுத்த உள்ளது.

renault nissan cars 2025 september sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையில் சரிவு இருந்தபோதிலும், நிசான் தனது வரவிருக்கும் எஸ்யூவி கார் மூலம் மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டெக்டன் மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கான 7 இருக்கை எம்பிவி கார் இந்தியாவில் நிசான் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுப்பக்கம், ரெனால்ட் நிறுவனம் டிரைபர் காருக்கு ஏற்பட்டிருக்கும் தேவையால் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 21, 2025, 18:43 [IST]
English summary
Renault nissan cars wise 2025 september sales report check all details here
மேலும்... #renault #nissan #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X